வேளாண்மை செம்மல் விருது

கோவை :

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்த, விவசாயிகள் ஐந்து பேருக்கு வேளாண்மை செம்மல் விருது வழங்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட நீர் நுட்பவியல் தொழில் நுட்பங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அதிக விளைச்சல், மானாவாரி வேளாண்மை, பண்ணை இயந்திர பயன்பாடு ஆகிய துறைகளில் சாதனை செய்த விவசாயிகள்
5 பேருக்கு தழிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் இணைந்து, “வேளாண்மை செம்மல் விருது’ வழங்கின.

தமிழகத்தில் உள்ள 30 வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் விண்ப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் போத்திராஜ் (ராமநாதபுரம்), துரைசாமி (கரூர்) , அருள் மைக்கேல் ஹென்றி (கன்னியகுமரி), மேகநாதன் (திருவாரூர்), மருதநாயகம் (மதுரை) ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் விருதுகளை விழங்கினார்.

நன்றி: தினமலர்

Related Posts

புதிய சூரிய காந்தி பயிர் – CO2 புதிய சூரியகாந்தி பயிர்: வீரிய ஒட்டு CO2சிறப்பிய...
Android போனில் மொபைல் app அன்ட்ராய்ட் போனில் பசுமை தமிழகம் படிக்க app டவுன்ல...
பார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி... பார்தேனியம் செடி விவசாயத்திற்கு மிக பெரும் பிரச்னை...
மக்களை பாதிக்கும் மக்காச் சோள ஜவ்வரிசி... முன்பைவிட உணவு குறித்தான விழிப்பு உணர்வு ஓரளவு மக்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *