ஒரு இயற்கை பூச்சி கொல்லி

விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சென்னை லயோலா கல்லூரி ஆய்வு மாணவர்கள் உருவாக்கியுள்ள பொன்னீம் என்ற இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து அறிமுகப் படுத்தப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம்  (Entomology research center) இயங்கி வருகிறது. பூச்சியியல் விஞ்ஞானி பாதிரியார் இன்னாசி முத்துவை இயக்குனராக கொண்டு செயல்படும் இந்த ஆய்வு மையத்தில் பூச்சியியல் சம்பந்தப்பட்ட ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சுற்றுசூழல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் குறைந்த விலையிலும் இயற்கை பூச்சிகொல்லி மருந்தை உருவாக்க இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தீவிர ஆய்வில் இறங்கினர்.

இந்த ஆய்வு மாணவர்கள் புங்கை எண்ணை, வேப்பெண்ணை மற்றும் தாவரங்களில் பெறப்பட்ட சில பொருட்களைக் கொண்டு இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து உருவாக்கினார்கள். இதற்கு பொன்னீம் என்று பெயரிடப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக் கொல்லியைக் கொண்டு நெல்,பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், காபி,தேயிலை போன்ற மலைப்பயிர்கள் ரோஜா, மல்லிகை முதலான மலர்கள் ஆகிய வற்றை தாக்கும் அனைத்து வகையான பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க லாம்.

இதை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. உற்பத்தி அதிகரிப்பதுடன் தானியங்கள் மற்றும் பழங்களின் சுவை யும் அதிகரிக்கும்.

பொன்னீம் தயாரிப்பது எப்படி?

45 % வெப்ப எண்ணை, 45 % புங்க எண்ணை இரண்டும் 10 % சோப்புடன் கலக்கவும். 30 மில்லி பொன்னீம் எடுத்து, 10  லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கவும். ஒரு ஏக்கருக்கு, ஒன்று முதல் இரண்டு லிட்டர் பொன்னீம் தேவை இருக்கும். காலையிலும் மாலையிலும் இந்த எண்ணையை தெளிக்கலாம். அப்போதுதான், பூசிகளின் நடமாட்டம் அதிகமாகஇருக்கும்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:

ரவி: வயல்னல்லூர் 0944706218 ஷீலா, கொளுமநிவாக்கம்: 09444288173

நன்றி: தமிழ் நாடு விவசாய பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்