என்டோசுல்பான் பயங்கரம்

பயிர்களுக்கு இடப்படும் எல்லா ரசாயன பூச்சி கொல்லிகளும் விஷங்கள் தான். இவை, நல்ல கேட்ட பூசிகள் என்று தரம் பார்த்து கொல்வதில்லை. இந்த பூச்சி கொல்லிகள் பயிர்களில் சிறு அளவில் இருந்தாலே நமக்கு கான்செர் போன்ற கொடிய வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம். அதனால் தான், மேற்கத்திய நாடுகள் இந்த பூசிகொல்லிகளை ஜாக்கிரதையாக பயன் படுத்துகின்றன. நம் நாட்டில் கேட்கவே வேண்டாம்.
கேரளாவில், சில வருடங்கள் முன் வரை, முந்திரி தோட்டங்களில் என்டோசுல்பான் (endosulfan) மருந்தை இட்டு வந்தனர். இந்த கொடிய பூச்சி மருந்தின் பக்க விளைவுகள் எல்லாருக்கும் தெரியும். இது வரை 500 பேர் பல வித வியாதிகளால் இறந்து உள்ளனர். 4000 பேர்கள் பல விதமான உடல் பாதிப்புகளால் அவதி படுகிறார்கள். பல நாடுகள் இதை தடை செய்து வருகின்றன. போன மாதம், உலகின் தடை செய்யாத கடைசி நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா தடை செய்தது

இந்த பூச்சி கொல்லியை தடை செய்ய கேரளாவின் முதல் அமைச்சர் டெல்லி வரை சென்று மன்றாடி பார்த்து விட்டார். டெல்லி செவி சாயவில்லை. என்டோசுல்பான் தொழிற்சாலைகள் நடத்தும் சில முக்ய புள்ளிகள் பாதிக்க படுவார்களே! கேரளா அரசால் முடிந்தது அவர்கள் மாநிலத்தில் தடை செய்துதான். ஆனால் அண்டை மாநிலங்கள் இருந்து எளிதாக வருகிறது இந்த ரசாயன கொல்லி!

உலகம் முழுவதும் இந்த பூச்சி கொல்லியை தடை செய்ய நடந்த கூட்டங்களில்  நம் அரசு இந்த முயற்சியை கெடுத்து வந்து உள்ளது.

எவ்வளவு நம் அரசாங்கம் நம் விவசாயிகளின் நல்வாழ்வை பாதுகாக்கிறார்கள் என்று இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “என்டோசுல்பான் பயங்கரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *