இயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த பிறைசூடிப் பித்தன் தன்னுடைய தென்னந்தோப்பில் அனுபவ பூர்வமாக கண்டு பிடித்த முறைகளை கூறுகிறார்:

  • உழவு போட்டு நாலு வருஷமாகிறது. விஷச்செடிகள் தவிர மற்ற செடிகளை அகற்றுவதில்லை.
  • பாசன நீருடன் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கலந்து போகும்படி பம்ப்செட் குழாயில் டேங்க் இணைத்து ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் என மாறி மாறி பாசன நீரில் சென்றுகொண்டே இருக்கும் என்று கூறுகிறார் விவசாயி.
  • தென்னை மரத்தைச் சுற்றிலும் சோற்றுக்கற்றாழை பயிர் செய்துள்ளார். கற்றாழையின் கசப்புத்தன்மை தென்னைமர வேர்களுக்கு செல்கிறது. இதனால் தென்னையைத் தாக்கும் ஈரியோபைட் வாடல் நோய் போன்றவை குறைகிறது.
  • இளம் குரும்பைகள் அதிக அளவு உதிர்வதும் குறைந்துவிட்டது.
  • சராசரியாக ஒரு மரத்திலிருந்து 40 நாட்களுக்கு ஒரு முறை 20 முதல் 25 முற்றிய காய்கள் அறு வடை செய்கிறார்.
  • தேங்காயின் தரம், கொப்பரையின் பிழிதிறன் அதிகரித்துள்ளது.
  • ஆண்டுக்கு இருமுறை மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரமும் இடுகிறார்.
  • தோப்பினுள் விழும் தென்னை மட்டைகளை வெட்டி, மரத்தைச் சுற்றிலும் மூடாக்காகப் போட்டுவிடுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் வெயில் காலங்களில் ஈரம் காக்கப்டுவதுடன் மட்கி எருவாகவும் மாறிவிடுகின்றன தென்னைக் கழிவுகள்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “இயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *