தென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை!

தென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று மதுஐர வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘மரங்களில் பராமரிப்பு செலவுகள் குறைவு, ஆண்டு முழுவதும் வருமானம் போன்ற காரணங்களுகாகவே தென்னையை விவசாயிகள் அதிகளவு நடவு செய்கின்றனர்.

தென்னை மரங்களுக்கு இடையில் ஏராளமான இடைவெளி நிலங்கள் கிைடக்கும். தென்னை மரங்களின் இடைவெளியில் ஊடு பயிராக குறுகிய கால பயிர்களான வெண்டை, நிலக்கடலை, சூரியகாந்தி, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள் சாகுபடி செய்தால் ஒரு குறிப்பிட்ட வருமானம் சம்பாதிக்கலாம்  அதேபோல் நீண்ட கால தாவரமான கோகோ  பயிர்கள் பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் கிடைக்கும்.

ஆனால் தென்னை மரங்களின் இடைவெளியில் வாழை சாகுபடி செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.

குறிப்பாக வாழை ரகங்களை சேர்ந்த பூவன், மொந்தன் சாகுபடி செய்வதால் அதிக வருமானம பெறலாம்.

தென்னை மரங்கள் இடைவெளியில் தேவையற்ற களைகள் வளர்ந்தால் உடனே அகற்றி விட வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண்ணின் வளம் செழிப்படையும்’’ என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *