நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த யோசனை

நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த கடையம் வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கார்பருவத்தில் நெல் குருத்துப்பூச்சியினால் பெருத்த சேதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது.

  • நெல் குருத்துப்பூச்சியை பூச்சி மருந்துகள் தெளித்து முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொண்டால் குருத்துப்பூச்சியை ஒழிக்க முடியும்.
  • நெல் நடவு செய்தவுடன் ஒரு ஏக்கரில் 5 எண்ணம் நெல் குருத்துப்பூச்சிக்கான இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்.
  • இப்பொறியிலுள்ள பெண் அந்துப்பூச்சியின் வாசனைக்கு ஆண் அந்துப்பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டு அழிக்கப்படும்.
  • இதனால் குருத்துப்பூச்சியின் இனப்பெருக்கம் முற்றிலும் தடைபட்டு குருத்துப்பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு கடையம் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுக வேண்டுமென கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

Related Posts

நெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை... பச்சை தத்துப்பூச்சி: மேலாண்மை: ஐ. ஆர் 50, சி ...
சம்பா நெல்சாகுபடிக்கு மேலுரம்... சம்பா நெல் சாகுபடிக்கு மேலுரம் இடுவதற்கு இதுவே தகு...
திருந்திய நெல் சாகுபடி தொழிற்நுட்பங்கள்... திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடைபிடி...
நெல்லுக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்... கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.ஆர்.முருகன் வெளி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *