பனை, தென்னை மரங்களை பாதுகாக்க பேரணி

“பனை, தென்னை மரங்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்படும்,’ என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது. சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொருளாளர் பாலசுப்பிரமணியம், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, மாநில அமைப்பாளர் கதிரேசன் உள்பட பலர் பேசினர்.

பனை, தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்க கோரி, 2012 ஜனவரியில் பேரணி நடத்தப்படுகிறது.

கன்னியாகுமரியில் பேரணி துவங்கி, சென்னையில் முடிவடையும்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:

  • கள் இறக்குவதற்கு விதித்திருக்கும் தடையை நீக்குவதற்கு நிதி ஒதுக்கீடோ, மின்சார தேவையோ இல்லை.
  • ஆகஸ்ட் 4ம் தேதி தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், கள்ளுக்கு விதித்திருக்கும் தடை நீக்கம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என, நம்பிக்கை வைத்துள்ளோம்.
  • கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்கினால், 10 லட்சம் பனை, தென்னை தொழிலாளர் குடும்பத்தினர் பயன் பெறுவர்.
  • கள்ளை பதப்படுத்தி இரண்டாண்டு கெடாத வகையில் டப்பாக்களிலும், பாட்டில்களிலும், பாலிதீன் பாக்கெட்டுகளிலும் அடைத்து, நட்சத்திர விடுதிகள், விமான நிலையங்களில் சந்தைப்படுத்துவதன் மூலம் தமிழகத்துக்கு அதிகளவு அந்நிய செலவாணி கிடைக்கும்.
  • இந்தியாவில் கற்பக விருட்சம், காமதேனு என சொல்லப்படும் பனை மரங்கள் வேகமாக வெட்டப்பட்டு வருகின்றன. பனை, தென்னை மரங்களை பாதுகாப்பது அரசின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பனை, தென்னை மரங்களை பாதுகாக்க பேரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *