"வாடல் நோயில்' இருந்து பருத்தியை காக்க

  • பருத்தி பயிரை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானது “வெர்டிசில்லியம்’ என்னும் வாடல் நோய்.
  • இது பாதித்தால், செடிகளில் இலைகளின் நரம்புகள் பச்சையாகவும், மற்ற பகுதிகள் மஞ்சளாகவும் மாறும்.
  • மஞ்சள் நிறப்பகுதி வாடி கருகிவிடும்.
  • எனவே இலை புலிவரிக்கோடுகள் போல தோன்றும். பின் இலைகள் காய்ந்து உதிரும். படிப்படியாக செடிகள் காயும்.
  • பருத்தி விதைக்கு முன் ஆழமாக கோடை உழவு செய்து நோய்க்காரணிகளை சூரியனின் வெப்பத்திற்கு உட்படுத்தி அழிக்க வேண்டும்.
  • விதைக்கும் முன் எக்டேருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
  • தொழு உரம் எக்டேருக்கு 12.5 டன் இடவேண்டும்.
  • விதையை நேர்த்தி செய்கையில், விரிடி என்ற உயிர் பூஞ்சானக்கொல்லி 4 கிராம் அல்லது கார்பன்டைசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம், ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

E_1392115087

 

 

 

 

 

நோய் தாக்கியபின்:

  • நோய் தாக்கியபின் என்றால் பூஞ்சானக் கொல்லி ஒரு கிராம் பவுடர் ஒருலிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து நோய் தாக்கப்பட்ட செடிகளின் வேரைச்சுற்றி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.
  • நோய் தாக்கிய செடியின் அருகில் உள்ள மற்ற செடிகளுக்கும் ஊற்ற வேண்டும்.
  • மேற்கண்ட முறைகளை கையாண்டு இந்த வாடல் நோயில் இருந்து பருத்திச் செடியை காக்கலாம். மகசூலையும் பெருக்கலாம்.

கி.ராஜேந்திரன்,
வேளாண்மை துணை இயக்குனர், மதுரை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *