சொட்டுநீர் பாசனத்தில் களை முளைக்காமல் இருக்க பாய் விரித்தல

சொட்டுநீர் பாசனத்தில் களைகள் முளைக்காமல் இருக்க பாய்விரித்தலில் சம்பங்கி பூ சாகுபடியினை வளர்த்து அறுவடை செய்ய விவசாயிகள் புதுடெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

சின்னமனூர் அருகே மேல பூலாநந்தபுரம், பூலாநந்தபுரம், கீழ பூலாநந்தபுரம், சீலையம்பட்டி, சமத்துவபுரம், கோட்டூர், ஜங்கால்பட்டி, வேப்பம்பட்டி சாலை என பல பகுதிகளில் பல ஆயிரக்கணக்கில் பலதரப்பட்ட பூக்கள் விவசாயம் செய்யபடுகிறது.

மழையும் சரிவர இல்லாததால் நிலத்தடிநீர் குறைந்து வருவதால் தொடர் சாகுபடி பூந்தோட்டங்களுக்கு பாசனநீர் பற்றாகுறையால் பூக்களை வளர்க்க முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.
இந்நிலையில் விவசாயத்தில் புது டெக்னிக்குளை அவ்வப்போது விவசாயத்துறைகளிலிருந்து புதிய ஆராய்ச்சிகளை புகுத்தி வருகின்றனர். அதன்படி வி வரம் தெரிய வருகின்ற சில விவசாயிகள் அந்த உத்தியினை கையாண்டு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அதன்படி சீலையம்பட்டி மேல பூலாநந்த புரத்தில் நிலத்தினை சமமப்படுத்தி டிரிப் செட்டப்பினை செய்து சம்பங்கி விதைகளை விதைத்து அதற்குமேல் ஓட்டைகளாக பாய்விரித்தலை விரிக்கின்றனர்.

Courtesy: Dinakaran

முளைத்து வருகின்றபோது அந்த ஓட்டை வழியாக முளைத்து வருவதைபோல் பாய் விரிக்கப்படுகிறது.

இந்த பாய்விரித்ததால் களைகள் முளைக்காது டிரிப்பில் தண்ணீர் தேவையான அளவு வேர்பகுதிக்கு மட்டும் செலுத்தி வளர்க்கின்றனர்.

இந்த முறையில் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரையில் செலவாகிறது. களைகள் பறிக்க கூலி ஆட்கள் தேவையில்லை

ஏக்கருக்கு 100 கிலோ வரையில் மகசூலாக கிடைக்கும்.ஒரு பாய்விரித்ததால் சூரியனின் வெப்பம் குறைந்து பயிர்களுக்கு குளிர்ச்சியினை நிலை நிறுத்தும்.ஒருமுறை விதைத்த இந்த சம்பங்கி சாகுபடி இந்த முறையால் 5 ஆண்டுகளுக்கு தொடர் பலன் கிடைக்கும்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *