திருத்துறைப்பூண்டி பாரம்பரிய நெல் விழா

பாரம்பரிய நெல் வகைகளை பற்றி ஹிந்து நாளிதழில் திரு நெல் ஜெயராமனை பற்றி படித்து உள்ளோம். பல விதமான பாரம்பரிய நெல் வகைகளும் அவற்றின் சிறப்புகளை பற்றி அவர் எழுதியுள்ளார்.

அவர் 9 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் விழாவை ஆதிரங்கம் இயற்கை பண்ணையில் நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் அது  நடக்கிறது.நேராக பாரம்பரிய நெல்  சாகுபடி செய்யும் விவசாயிகளை சந்திக்க ஒரு உன்னத வாய்ப்பு…இதை பற்றிய செய்தி இதோ…

திருத்துறைப்பூண்டி பாரம்பரிய நெல் திருவிழா

பாரம்பரிய நெல் வகைகளைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைப் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம். ‘கிரியேட்’ CREAT அமைப்பின் ஓர் அங்கமாகச் செயல்பட்டுவரும் இந்த இயக்கத்தின் முயற்சியால் கடந்த பத்தாண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் பரவலாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் முதல் நெல் திருவிழா நடைபெற்றது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கி வைத்த அந்த விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

ஒவ்வோர் ஆண்டும் மே மாத இறுதியில் ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு மே 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் 9-வது நெல் திருவிழா நடைபெறுகிறது. 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் திருவிழாவில் பங்கேற்கின்றனர். தமிழக அரசின் வேளாண்மைத் துறை மூலம் மட்டுமே 1,600 விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா 2 கிலோ விதை நெல் வழங்குவதற்காக 153 பாரம்பரிய நெல் ரக விதைகளைச் சேகரித்துள்ளோம். இவை வறட்சி, வெள்ளம், பூச்சி தாக்குதலைத் தாங்கி வளரக்கூடியவை” என்கிறார் நெல் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன்.

– வி. தேவதாசன்

திருவிழா தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு: 09443320954

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *