BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2

மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர்  பகுதி:

மகாராஷ்ட்ராவில் விதர்பா பகுதியில் Bt பருத்தி விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொன்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்தி.

ஒரு சார்பினர், Bt பருத்தி சாகுபடி செய்ய அதிகம் செலவு, விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி கொடுக்க வில்லை என்பது காரணம் என்கின்றனர்.

இதை பற்றி இதோ ஹிந்து இதழில் வந்துள்ள ஒரு பகுப்பாய்வு:

  • விதர்பா பகுதியில் 140 Bt பருத்தி விவசாயிகளை நேர்காணல் மூலம் தகவல் அறிந்த நிறுவனம் கண்டுபிடுத்த உண்மைகள்:
  • Bt பருத்தியில் 70%சதவீதம் பருத்தியில் பாசன செலவு அதிகம் என்றனர்
  • Bt பருத்தியில் 71% உர செலவும் அதிகம் ஆகிறது என்கின்றனர். சாதாரண பருத்தியை விட அதிகம் உரம் செலவு ஆகிறது.
  • அதிகம் பேர் விவசாயிகளின் தற்கொலைக்கு மழை பொய்த்து தான் காரணம் என்றனர். விதர்பா மழை குறைவான பகுதி. இங்கே, அதிகம் நீர் தேவை படும் பருத்தியை பயிர் இட்டது தவறு என்கின்றனர்.
  • கிணற்றையும், வானத்தையும் பார்த்த பூமிகளில் இந்த மாதிரி பயிர்களை பயிர் இட்டால் உற்பத்தி குறைந்து தான் வரும். ஏற்கனவே அதிகம் காசு கொடுத்து Bt பருத்தி விதைகள் வாங்கி, அதிகம் செலவு செய்து உரம் போட்டு, மோட்டார் வைத்து நீர் இறைத்து விட்டதால் நஷ்டம் ஆகி போகிறது என்கிறது இந்த அறிக்கை.
  • சரியான நீர் பாசனம் இல்லாத இடங்களில், வானம் பார்த்த நிலங்களில் பருத்தி பயிர் இடுவதை தடுக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை

நன்றி: ஹிந்து நாளிதழ்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “BT பருத்தி (Bt cotton) சச்சரவுகள் – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *