வாழையில் கிழங்கு அழுகல் நோய் கட்டுபடுத்துவது எப்படி

வாழை சாகுபடியில் கன்று நடவில் இருந்து ஐந்து மாதங்கள் வரை கிழங்கு அழுகல் நோய் அதிகம் காணப்படும்.

அறிகுறிகள்

  • நோய் தாக்கப்பட்ட கன்றின் இலைகள் மஞ்சளாகவும், இளம் குருத்து மிகவும் சிறுத்தும், இலைகள் வெளிவர முடியாமல் தண்டின் உள்ளேயே இருப்பது போல் காணப்படும்.
  • ஆரம்பத்தில் குருத்து இலைகள் காய்ந்தும் மற்ற இலைகள் பச்சையாகவும் இருக்கும். நாளடைவில் பச்சை இலைகளும் காய்ந்து விடும்.
  • அடித்தண்டு உப்பி பெருத்தும், தரைமட்டத்தில் தண்டில் கருப்பு நிற வளையமும், வெடிப்பும் காணப்படும்.
  • சில சமயம் தரைமட்டத்தில் அடித்தண்டில் தண்டுப்பகுதி அழுகி காணப்படுவதால் தண்டை பிடித்து லேசாக இழுத்தால் தண்டு கிழங்கில் இருந்து தனியே வந்து விடும்.

பரவும் வீதம்:

  • வடிகால் வசதி இல்லாமல் இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பது, கோடை காலத்தில் மண் வெப்பம் அதிகரிக்கும் போது, எர்வீனியா என்ற இந்த கிழங்கு அழுகல்நோய் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • மழைகாலத்தில் நிலத்திற்கு நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • வெயில் காலங்களில் ஊடுபயிராக சணப்பை பயிரிட்டு, 45 நாட்கள் கழித்து பிடுங்கி, மண்ணில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • நடவு நட்ட 3ம் நாள் எமிசான் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றினை சுற்றி ஊற்ற வேண்டும்.
  • ஒரு லிட்டருக்கு கார்பன்டசிம் ஒரு கிராம், ஸ்டெப்ரோமைசீன் 0.20 கிராம் கலந்து ஒவ்வொரு கன்றிற்கும் 250 மி.லி., வீதம் கன்றினை சுற்றி ஊற்ற வேண்டும்.
  • புரோப்பிகோனசோல் மருந்து: 0.5 மி.லி., ஸ்டெப்ரோமைசீன் சல்பேட் 0.20 கிராம், ஒரு லிட்டரில் கலந்து ஒவ்வொரு கன்றிற்கும் 250 மி.லி., வீதம் ஊற்ற வேண்டும்.
  • முதல் மருந்திற்கு பின்னர், 20வது நாள், 40வது நாளில் இதேபோல் வேர்பாகத்தை நனைப்பதன் மூலம் எர்வீனியா என்ற கிழங்கு அழுகல் நோயில் இருந்து வாழையை பாதுகாக்கலாம்.

இவ்வாறு தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் கூறினார்.

நன்றி: தினமலர்

Related Posts

வாழையில் மதிப்பூட்டுதல் வாழைப்பழத்தில் இருந்து உலர் வாழைப்பழம், பொடி, இணை ...
வாழையில் சூறை காற்று சேதங்களை தடுப்பது எப்படி?... வாழைத்தோட்டங்களை சுற்றிலும் 'சுங்குனியானா' ரக சவுக...
வாழை சாகுபடியில் அடர் நடவு முறை... வாழை சாகுபடியில் அடர் நடவு முறை லாபகரமானது என்று த...
வாழையில் பனாமா வாடல் நோய் அறிகுறிகள் தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் தி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *