கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்

கரும்பில் இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா, ஒட்டுண்ணி முட்டை அட்டை கட்ட வேண்டும்

  •  இப்புழு கணுக்களை பாதிப்பதால், கணுக்களின் இடைவெளி குறைந்துவிடும்.
  • கணுக்களின் உட்புறம் திசுக்கள் சிவந்து விடும்.
  • கணுக்களின் அருகே புழுக்களின் துளைகள் இருக்கும். அவை முழுமையாக பாதிக்கப்பட்டு மேலே சத்துகள் செல்லாததால், கரும்பின் வளர்ச்சி குன்றி, குருத்து இலைகள் காய்ந்துவிடும்.
  • அதனால் கரும்பின் எடை, தரம், சர்க்கரை சத்துக்கள் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.
  • இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா ஒட்டுண்ணி முட்டை அட்டைகளை கட்ட வேண்டும்.
  • அட்டைகளை மாலை வேளையில் இலையின் பின்புறத்தில் கட்ட வேண்டும்.
  • 150ம் நாள் மற்றும் 210ம் நாளில் சோகை உறிக்க வேண்டும்.
  • ஒட்டுண்ணி அட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு மையத்தில் கிடைக்கும். தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்

இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் பேசினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *