மிரட்டும் பயங்கர காட்டு தீக்கள்!

உலகம் வெப்பமாக ஆகிக்கொண்டு இருப்பது 20 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்களால் சந்தேக பாடப்பட்டது. இண்டஸ்ட்ரியல் ஏஜ் (Industrial age) எனப்படும் கடந்த 200 ஆண்டுகளாக மனிதன் அதிக அளவு கரியை பயன் படுத்த ஆரம்பித்தான். ஒரு இடத்தில இருந்து ஒரு ஒரு இடம் போக ரயில்கள்,மின்சாரம் generate செய்ய என்று அதிகம் கரி தான் பயன் பட்டது. பிறகு கார்கள் வந்தவுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவு கார்களை பயன் படுத்த ஆரம்பித்தனர்.

இவை எல்லாம் அதிக அளவு கார்பன் ட்யாக்சாய்ட் (CO2) எனப்படும் வாயுவை வெளியில் விடும் தன்மை கொண்டவை. இந்த வாயு கிரீன்ஹவுஸ் காஸ் எனப்படும் வகை. உலகின் வெப்பத்தை உலகத்திற்கே பிரதிபலித்து உலகத்தின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலை ஆரம்பித்தது.

மனிதர்கள் உருவாகும் இந்த கிரீன்ஹவுஸ் காஸ் குறைத்தால் தான் 2100 ஆண்டு உலகத்தின் வெப்பநிலை 2C குறைவாக உயரும். என்ன 2C என்று பார்க்கிறீர்களா? இந்த அளவு உலகின் வெப்பநிலை ஏறினால் அண்டார்டிகா முழுவதும் உருகி அதனால் வரும் நீர் பல நாடுகளை தீவுகளை மூழ்கடித்து விடும். இந்த வெப்ப உயர்வை தாங்காமல் பல தாவரங்கள் மிருகங்கள் அழிந்து விடும்.

2100 வருடம் பல ஆண்டுகள் இருக்கின்றன என்று கவலையே படாமல் வாழ்ந்து வரும் மனிதனுக்கு இயற்கை 2100 ஆண்டு உலகம் எப்படி இருக்கும் என்று சில ட்ரைலர்களை காட்டி வருகிறது.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டு தீ கட்டுக்கு அடங்காமல் எரிந்து வருகிறது. பலர் மரணம், பல சொத்துக்கள் அழிவு. வருடா வருடம் இந்த காட்டு தீ வரும் என்றாலும் இந்த ஆண்டு அதன் பலம் (intensity) மிக அதிகம். நிறுத்தவே முடியவில்லை.

காலநிலை ஆராய்ச்சியாளர்கள் (Climate researchers) இதற்கு காரணம் சிறிய சிறிய வெப்பநிலை மாறுதல்கள் தான் என்கின்றனர். அதிக இலைகள் தரையில் விழுந்தது, பனி காலம் குறைந்ததால் இவை காய்ந்தது, வழக்கத்திற்கு அதிகமான பகல் வெப்பம் என்று ஒன்றுக்கு ஒன்றுக்கு சம்பந்தம் இல்லாத சிறிய மாற்றங்கள் இப்படி ஒரு பெரிய இடரை ஏற்படுத்தி உள்ளது..

இந்த தீயில் இருந்து சில படங்களை பார்ப்போமா?

கடவுள் (நீங்கள் திராவிட வழியில் வரும் கடவுளை நம்பாதவராக இருந்தால் – இயற்கை) நமக்கு காட்டும் இந்த trailer நாம் புரிந்து கொண்டு நாம் நம் வழிகளை மாற்றிக்கொண்டால் வருங்கால சந்ததியினர் இந்த உலகத்தில் வாழலாம்..

மேலும் படிக்க – SF Chronicle , New York Times


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *