விவசாயிகளின் கடன் நிலைமையும் இயற்கை விவசாயமும்

இந்தியாவிலேயே தமிழக விவசாயிகள்  இரண்டாவது இடத்தில கடனாளிகளாக இருப்பதாக 12 கோடி சொத்து மதிப்பு அறிவித்துள்ள விவசாய மந்திரி சரத் பவர் கூறியுள்ளார்.
இப்படி விவசாயிகளை கடனாளிகளாக ஆகியது எது?

இதற்கான முதல் காரணம், ஈடு பொருள்களின் விலை உயர்வே.

ரசாயன உரங்கள், ரசாயன பூச்சி கொல்லிகள் எல்லாம் கச்சா எண்ணை இருந்து தயாரிக்க படுகின்றன. எப்போதெல்லாம் இதன் விலை ஏறுகிறதோ, ரசாயன உரங்களின் விலையும் ஏறுகிறது. பொடஷ் போன்ற கச்சா பொருட்கள் கிடைப்பதும் அரிதாக ஆகி கொண்டு இருக்கிறது.
செலவு அதிகம் செய்து, இப்படி ரசாயன விவசாயம் செய்ய அதிக பணம் தேவை படுகிறது. அதனால், விவசாயிகள், அவர்கள் ஊரில் உள்ள வட்டிக்கு கடன் கொடுக்கும் வட்டிக்காரர்கள் கேட்டு கடன் பெறுகிறார்கள். திடீரென்று பெய்யும் மழை, பூச்சி தாக்குதல் போன்றவற்றால் பாதிக்க பட்டால் கடனை கொடுக்க முடியாமல் கடனாளியாக நிற்கின்றார்கள்.
இந்த நிலையில் இருந்து வெளியே வர இயற்கை விவசாயமே வழி. சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் பொருட்கள் இருந்து இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி விரட்டிகள் மூலம் கிடைக்கும் மகசூல், சில நேரம் சிறிது குறைந்து இருந்தாலும், ஒரு விவசாயி கடனாளி ஆகும் வாய்ப்பு  குறைவு! ஏனென்றால், இயற்கை விவசாயத்தில் ஈடு பொருட்களின் செலவு  குறைவு.

தமிழக விவசாயிகள் கடனாளி நிலைமையில் இருந்து வெளியில் வர இதுதான் வழி

Related Posts

மரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..... மரபணு வாய்பூட்டு சட்டத்தை பற்றி நாம் ஏற்கனவே பார்த...
இந்தியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல் வாதி: சரத் பவார்... இந்திய டுடே பத்திரிக்கை இந்தியா முழுவதும்  ஒரு கரு...
மோடியின் அமரிக்க பயணமும் மரபணு மாற்ற பயிர்களும்... UPA அரசாங்கத்தில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் Kn...
மரத்வாடா நீர் பிரச்னையும் தமிழ்நாடும்... மகாராஷ்ட்ராவில்  மரத்வாடா மற்றும் விதர்பா என்று இர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *