துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்

துவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை:

  • பயறு வகை பயிர்களில் அதிக புரதச்சத்து நிறைந்தது துவரை. இப்பயிர் சாகுபடி நேரடி விதைப்பு செய்யும் முறை பல பகுதிகளில் உள்ளது. கோலியனூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பாலித்தீன் பைகளில் நாற்று விட்டு நடவு செய்யும் முறை துவங்கியது.
  • இந்த நடவு முறையில் ஏக்கருக்கு சுமார் 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
  • நேரடி விதைப்பு மூலம் ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ மட்டுமே மகசூல் எடுக்க முடியும்.
  • பாலித்தீன் பை நாற்று வளர்த்து நடவு செய்யும் போது, ஏக்கருக்கு சுமார் 1250 கிலோ மகசூல் எளிதாக எடுக்க முடிகிறது.
  • அரசு வேளாண்மை துறையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை நாற்றுவிட்டு நடவு முறை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்படுகிறது.
  • துவரை பயிருக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
  • இதை பயன்படுத்தி பானாம்பட்டு, குருமன்கோட்டை, மேல்பாதி, தொடர்ந்தனூர், நரையூர், காகுப்பம், தென்னமாதேவி, செங்காடு, சோழகனூர், சோழாம்பூண்டி ஆகிய கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்க தளைகள் அமைக்க விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் துவரை நாற்றுவிட்டு நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  • இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர் 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

வீடுகளில் உளுந்து, துவரை வளர்க்கலாம்... வீடுகளில் அடுக்கு முறையில் உளுந்து, துவரை செடிகள்,...
துவரை விளைச்சலை அதிகரிக்க யோசனைகள்... விவசாயிகள் நடவு முறையில் துவரை விளைச்சலை அதிகரிக்க...
நடவு முறையில் துவரை சாகுபடி சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்ப...
பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா?... நெல், கரும்புக்கு மாற்றாக, பருப்பு வகைகள் சா...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *