துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்

துவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென விழுப்புரம் வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை:

  • பயறு வகை பயிர்களில் அதிக புரதச்சத்து நிறைந்தது துவரை. இப்பயிர் சாகுபடி நேரடி விதைப்பு செய்யும் முறை பல பகுதிகளில் உள்ளது. கோலியனூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பாலித்தீன் பைகளில் நாற்று விட்டு நடவு செய்யும் முறை துவங்கியது.
  • இந்த நடவு முறையில் ஏக்கருக்கு சுமார் 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
  • நேரடி விதைப்பு மூலம் ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ மட்டுமே மகசூல் எடுக்க முடியும்.
  • பாலித்தீன் பை நாற்று வளர்த்து நடவு செய்யும் போது, ஏக்கருக்கு சுமார் 1250 கிலோ மகசூல் எளிதாக எடுக்க முடிகிறது.
  • அரசு வேளாண்மை துறையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை நாற்றுவிட்டு நடவு முறை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்படுகிறது.
  • துவரை பயிருக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
  • இதை பயன்படுத்தி பானாம்பட்டு, குருமன்கோட்டை, மேல்பாதி, தொடர்ந்தனூர், நரையூர், காகுப்பம், தென்னமாதேவி, செங்காடு, சோழகனூர், சோழாம்பூண்டி ஆகிய கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்க தளைகள் அமைக்க விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் துவரை நாற்றுவிட்டு நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  • இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *