புயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு முறைகள்

கடலூர் தானே  புயலால் பாதிக்கப்பட்ட  தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

  • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன.
  • புயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.
  •  குருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற, பழுத்து ஒடிந்த மட்டைகளை கூரிய கத்திக் கொண்டு சாய்வாகச் சீவி அகற்ற வேண்டும்.
  • ஒடிந்த நடுக் குருத்தைச் சுற்றியப் பகுதிகளை சுத்தம் செய்து, மட்டைகளை வெட்டிய பகுதிகளில் காப்பர் ஆக்ஸி குளோரைடு எனும் பூஞ்சாணக் கொல்லி (ஒரு பங்கு தண்ணீர் 2 பங்கு பைட்டோலான்) கலவையைப் பூசிவிட  வேண்டும்.
  • குருத்துப் பகுதியில் காயம்பட்ட இடத்தில் இதே பூஞ்சாணக் கொல்லியில் 2 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். இதனால் வெட்டுப் பகுதியிலும் குருத்துப் பகுதியிலும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களான ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் மற்றும் 3 கிலோ பொட்டாஷை 6 மாதங்களுக்கு ஒரு முறைப் பிரித்து இடவேண்டும்.
  •  ஊட்டச்சத்துகள் மற்றும் பயிர் ஊக்கிகள் கலந்த பசஅம தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2 பாக்கெட் (200 மில்லி) என்ற அளவில், 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி

Related Posts

தென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்... தென்னையில் தற்போது புதிதாகப் பரவிவரும் வாடல் நோயைக...
தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்... தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட...
புதிய தென்னை பயிர் த.வே.ப.க. தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)3 இளநீருக்கு...
தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி... தென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *