தீவனப்பயிர் சாகுபடிப் பயிற்சி

புதுக்கோட்டை அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தீவனப்பயிர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வரும் வெள்ளிக்கிழமை(2013 செப்.6ம்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்:

இன்றைய காலக்கட்டத்தில் விவசாய நிலங்கள் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது.

அதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் மற்றும் பசுந்தீவனப் புல் கிடைப்பது அரிதாக உள்ளது.

மாவட்டத்தில் புல்வெளி சுமார் 5,400 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில், கால்நடைகளுக்கு பசுந்தீவனத்திற்கு தீவனப்புல் பயிர்களான கம்பு நேப்பியர் புல் (கோ-4), தீவன மறுதாம்பு சோளம் (கோ29), கினிப்புல் (கோ2), தீவன தட்டைப்பயிறு (கோ-5), முயல் மசால், வேலி மசால் போன்ற பயிறு வகை தீவனப்பயிர்களையும், சுபா புல், அகத்தி போன்ற மரப்பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடி குறித்து பயிற்சி வரும் வெள்ளிக்கிழமை வம்பன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் அளிக்கப்பட உள்ளது.

இதில் ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 09444719043 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Related Posts

கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் பெங்களூருவில் 2015 பிப்ரவரி 23-ஆம் தேதி முதல...
வேளாண் காடு, மலர் சாகுபடி, செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சிகள்... நாமக்கல் அறிவியல் வேளாண் மையத்தில் 2015 நவம்பர் மா...
களை மேலாண்மை இலவச பயிற்சி பயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை என்ற தல...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *