அழிவின் விளம்பில் பனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கற்பகத்தரு என்று கிராம மக்களால் அழைக்கப்பட்ட பனைமரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பனைமரங்களை வைத்து வளர்ப்பதிலும், தானாக வளரும் பனைமரங்களை பாதுகாப்பதிலும் தற்போது விவசாயிகளும் ஆர்வம் காட்டுவதில்லை.

கடந்த காலங்களில் பனைமரத்தின் அனைத்து பாகங்களும் கிராமத்தில் பயன்படுவதாக இருந்தது. இதனால் இதை “கற்பகத்தரு’ என்று கிராம மக்கள் அழைப்பர்.இந்த மரங்களின் ஓலைகள் கூரை வீடுகளின் மேற்கூரைகளாக பயன்பட்டன. மரங்கள் வீடு கட்ட பயன்பட்டன.

பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர் நல்ல குளிர்பானம். தற்போது கிராமங்களில் புதிதாக வீடு கட்டுவோர் பெரும்பாலானோர் கூரை வீடுகளே கட்டுவது கிடையாது.

Panai

கடந்த அரசால் கல் வீடுகளும், தற்போதைய அரசால் பசுமை வீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.÷இதனால் வரும் காலத்தில் கூரைவீடுகளே இல்லாமல் போகும் சூழ்நிலைகளும் உருவாகலாம்.தற்போது கூரைவீட்டுக்கு தேவையான பனைமரத்தின் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது.

பதநீர் இறக்கும் தொழிலும் சொல்லும்படி இல்லை. சிலர் பதநீர் என்ற பெயரில், பானைகளில் சுண்ணாம்பு தடவாமல் இறக்கிக் கள்ளாக பயன்படுத்தும் சம்பவங்கள் சில இடங்களில் நடைபெறும்.இதனால் போலீஸôரின் கெடுபிடி அதிகமானதால் பதநீர் இறக்குபவர்களும் கூட அத்  தொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.தற்போது பனங்காய், நுங்கு போன்றவற்றுக்கு மட்டுமே பனைமரங்கள் பயன்பட்டு வருகின்றன.இதனால் தற்போது பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமோ, அதை  வைத்து வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையோ அறுகிவிட்டது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டுமனைகள், தொழிற்சாலைகள் போன்றவை அமைக்கும்போது ஆயிரக்கணக்கில் பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன.

ஆனால் புதிதாக யாரும் பனைமரங்களை வளர்ப்பதில்லை. வயல்வெளிகளில் தானாக வளர்ந்தாலும் அதை விவசாயிகள் பாதுகாக்காமல் அப்புறப்படுத்தி விடுகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டபோது “பனைமரங்களில் இருந்து பனங்கற்கண்டுகள் தயாரிக்கலாம்.பனைவெல்லம் உடலுக்கு நல்லது. பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பதநீர் நல்ல குளிர்பானம். இதனுடன் சில பொருள்களை கலந்து கெடாமல் பாட்டிலில் அடைத்து வைத்து குளிர்பானம்போல் விற்பனை செய்ய முடியும்.ஆனால் இவை குறித்து விவசாயிகளுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். பனையின் பயன்பாடு அதிகரிக்கும்போது அதை தானாகவே விவசாயிகள் பாதுகாக்கத் தொடங்குவர்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அழிவின் விளம்பில் பனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *