வாழையில் பனாமா வாடல் நோய

கோடை காலத்தில் வாழையில், பனாமா வாடல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

  • கோடை காலங்களில் வாழையில் பனாமா வாடல் நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த பூஞ்சானம் அதிகமாகக் காணப்படும்.
  • இந்நோய் தாக்கப்பட்டால் முதலில் அடிப்பக்க இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காம்பிலிருந்து ஒடிந்து விடும்.
  • பியூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்ற பூஞ்சானம் சைலம் திசுக்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுகிறது. இதனால் வேரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் நீர் மற்றும் சத்துக்கள் தடை செய்யப்பட்டு, வாழை வாடத் துவங்கு கிறது.
  • நோய் தாக்கிய வாழைக் கிழங்குகளை புதிய இடத்தில் நடுவதாலும், நோய் தாக்காத வாழையின் வேர்களை நோயுள்ள வாழையின் வேர்கள் தொடுவதாலும் இந்நோய் பரவுகிறது.
  • நோய் தாக்கிய வாழையை வேருடன் பறித்து எரித்து விட்டு அந்த குழிகளில் சுண்ணாம்பு இட வேண்டும்.
  • மண்ணின் அமிலத்தன்மையை, சுண்ணாம்பு இட்டு சரி செய்வதன் மூலம் வாடல் நோய் வரமால் தடுக்கலாம்.
  • நோய் தாக்காத பகுதிகளிலிருந்து கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
  • சூடோமோனஸ் புளூரசன்ஸ் என்னும் பாக்டீரியா மூலமும் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வாழையில் பனாமா வாடல் நோய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *