சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடாசலம கூறுகிறார:
- ஆமணக்கு பயிர், நம் நாட்டுக்கு அன்னிய செலாவணியை கொடுக்கும் பயிர். ஆமணக்கு எண்ணெய், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- ஆமணக்கின் தேவை, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், சர்வதேச மற்றும் இந்திய சந்தையில் இதன் விலை உயர்ந்து வருகிறது.
- மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் இதுவரை, டி.எம்.வி.சி.எச் – 1 மற்றும் ஒய்.ஆர்.சி.எச் – 1 என்ற, இரண்டு வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்கள், 1998 மற்றும் 2009ல், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன.
- ஆமணக்கில் உயர் விளைச்சல், வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தியதை அங்கீகரிக்கும் பொருட்டு, 2012ல், ஐதராபாதில் உள்ள இந்திய எண்ணெய் வித்து ஆராய்ச்சி கழகம், ஏத்தாப்பூர் ஆராய்ச்சி நிலையத்தை தேர்வு செய்து, விருது வழங்கியது.
- தமிழகத்தில் சித்திரை, ஆடி மற்றும் ஐப்பசி பட்டங்களில், ஆமணக்கு பயிரிடப்பட்டு வருகிறது.
- குறைந்த செலவினம், குறைந்த நீர் தேவை, கூலியாள்கள், வறட்சியை தாங்கி வளரும் பண்பு மற்றும் நிலையான சந்தை மதிப்பு காரணங்களால், பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள், ஆமணக்கை விருப்ப பயிராக சாகுபடி செய்கின்றனர்.
- வீரிய ஓட்டு ரக ஆமணக்கு, அனைத்து விதமான மண் வகைகளிலும் குறிப்பாக, வளம் குன்றிய மண்ணிலும் வளர்ந்து, விளைச்சலை கொடுக்கும்.
- இந்த பயிரை, இறவை மற்றும் மானாவாரி பட்டங்களில், நிலக்கடலை, உளுந்து, வெள்ளரி, சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுடன் ஊடுபயிராகவும் பயிரிட்டு, கூடுதல் வருமானம் பெறலாம்.
- இதுமட்டுமின்றி, முக்கிய பயிர்களில் பூச்சித் தாக்குதலை குறைக்கவும் வழி செய்கிறது.
- ஆமணக்கு செடியிலுள்ள கிளையின் தன்மை, தண்டின் நிறம், சாம்பல் பூச்சு, காய்களின் தன்மை மற்றும் வயது ஆகியவை, ரகங்களுக்கு ஏற்ப மாறுபடும். அதிக விளைச்சல் தரக்கூடிய, ஒய்.ஆர்.சி.எச் – 1, டி.சி.எச் – 519, ஜி.சி.எச் – 4 ஆகிய ரகங்களை, தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது, ஏக்கருக்கு, 1,500 கிலோ வரை, மானாவாரியிலும் விளைச்சல் பெறலாம்.
- வீரிய ஒட்டு ரக ஆமணக்கு ரகங்கள், 150 – 170 நாள்களுக்குள் அறுவடை முடிந்து விடும். முதல் அறுவடை, விதைத்த, 90வது நாளும், இரண்டாவது அறுவடை, 120வது நாளும், கடைசி அறுவடை, 150வது நாளும் செய்யலாம். வீரிய ஒட்டு ரக ஆமணக்கு கிலோ, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
- இதன் விதைகளை, மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: 04282293526 .
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Nice and v v useful for farmers