அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 1

அஸ்பெஸ்டாஸ் மூலம் செய்ய பட்ட கூரைகளை நாம் அங்கங்கே பார்க்கிறோம். ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தின் கூரையாக அஸ்பெஸ்டாஸ் வேய பட்டிருக்கும். சுமார் 50 வருடம் முன்னாள் வரை இந்த அஸ்பெஸ்டாஸ் இந்தியாவில் கிடையாது. ஆனால் 1950 வருடம் பின்னர் அஸ்பெஸ்டாஸ் கூரைகள் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டன

ரயில்வே நிலையங்களில் அஸ்பெஸ்டாஸ் கூரை - Photo courtesy: Jishnu
ரயில்வே நிலையங்களில் அஸ்பெஸ்டாஸ் கூரை – Photo courtesy: Jishnu

கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆக இருந்த போது குடிசை வாசி மக்களுக்கு அஸ்பெஸ்டாஸ் கூரை மூலம் வீடு கட்டி கொடுக்க பட்டது. தமிழ் நாடு முழுவதும் இந்த கூரைகள் அதிகம் உபயோகம் அதிகரித்தது.

தென்னை ஓலை மூலம் செய்த கூரைகள் எளிதாக நெருப்பு பற்றி கொள்ளும். சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள சேரிகளில் இப்படி அடிக்கடி நெருப்பு ஏற்பட்டதால் அவர்களுக்கு அஸ்பெஸ்டாஸ்  கூரை வேய பட்டது

நெருப்பு பற்றி கொள்ளா திறமை, பராமரிப்பு தேவையின்மை, கடினமான பளுவை தாங்கும் திறன், வெயில்/மழை மூலம் ஏற்படும் அரிப்பு மிகவும் குறைவு போன்ற காரணங்களால் அஸ்பெஸ்டாஸ்  மக்களிடையே பிரபலம் ஆயிற்று

மும்பை நகரில் உள்ள சேரிகளில் அஸ்பெஸ்டாஸ் மூலம் வேய பட்ட கூரைகள் Courtesy: Guardian
மும்பை நகரில் உள்ள சேரிகளில் அஸ்பெஸ்டாஸ் மூலம் வேய பட்ட கூரைகள் Courtesy: Guardian

ஆனால் இந்த அஸ்பெஸ்டாஸ் ஒரு மிக பெரிய சுற்று சூழல் கேடு என்பது தெரியுமா? தெரிந்து கொண்டே நம் மதிய அரசு கண்ணை மூடிக்கொண்டு இருப்பது தெரியுமா? மேலும் அறிவோம்..


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 1

  • admin says:

   Dear Sir,
   Thanks for the feedback. I will get the share link added to the app in next release.
   Warm regards
   -admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *