அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 3

நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் நிலை என்ன பார்ப்போமா?

Courtesy: Hindu
Courtesy: Hindu

நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் சுரங்கம் சட்ட படியாக அனுமதி இல்லை. ஆனால் கனடா நாட்டில் இருந்து அஸ்பெஸ்டாஸ் இறக்குமதி செய்ய படுகிறது. வருடத்திற்கு 100000 டன் இறக்குமதி. இதில் வேடிக்கை என்ன என்றால் கனடா நாடு தன்னுடைய ஊரில் அஸ்பெஸ்டாஸ் தடை செய்து விட்டது. 130 வருடங்கள் கழித்து 2011 வருடம் அஸ்பெஸ்டாஸ் சுரங்கங்கள் மூட பட்டன. ஆனால் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய சில சுரங்கங்கள் திறக்க அரசு அனுமதி கொடுத்து உள்ளது.

அதாவது தன் சுகத்தை பார்த்து கொள்ளுவார்களாம், மற்றவரை பற்றி கவலை இல்லை.

அப்படி இறக்குமதி செய்ய பட்ட அஸ்பெஸ்டாஸ் இந்தியாவில் சிமெண்ட் சேர்க்க பட்டு கூரைகளாக மாற்ற படுகின்றன.

நாம் முன்னே படித்தபடி மிக சிறிய அளவு அஸ்பெஸ்டாஸ் நார் மூச்சு உள்ளே சென்றாலும் புற்று நோய் வரும் சாத்தியகூறுகள் அதிகம்.2009 வருடம் கனடாவை சேர்ந்த மெலிசா புங் என்ற செய்தியாளர் இந்தியா வந்து அஸ்பெஸ்டாஸ் கூரைகள் செய்யப்படும் தொழிற்சாலைகளை வீடியோ எடுத்து கனடா டிவி ஒளி பரப்பினார். இதில் எப்படி இந்திய தொழிற்சாலைகளில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வேலையாட்கள் வேலை செய்வது தெரிய வந்தது. இவர்கள் எல்லாம் நிச்சயம் வாழ்வில் புற்று நோய் வரும்.

இந்திய அரசு 2011 வருடம் உலக சுகாதார அமைப்பு (World Health Organization WHO) ரோட்டேர்டம் ஊரில் நடந்த மாநாட்டில் அஸ்பெஸ்டாஸ் தடையை எதிர்த்தது. நம் நாடு மட்டும் தான் தன்னுடைய மக்களை இப்படி கை விடும். பக்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா கூட தன மக்களின் நலனை பார்த்து கொள்கிறது!

2011 வருடம் உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதி மன்றம் தடை பற்றிய முடிவை மதிய அரசிடம் விட்டு விட்டது.

இந்தியாவில் அஸ்பெஸ்டாஸ் 12000 கோடி சந்தை, 100 தொழிற்சாலைகள் உள்ளன.  இப்படி பட்ட எதிர்த்து அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்கும்? ஆக நம் நாட்டில் அஸ்பெஸ்டாஸ் ஜாம் ஜாம் என்று விற்பனை நடக்கிறது.

சரி, அரசை நம்பி பயன் இல்லை, நம்மை நாமாக பாதுகாத்து கொள்வது எப்படி – இதை அடுத்து பாப்போம்..

References


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *