நாம் தினமும் உண்ணும் காய்கறிகளிலும் பழங்களிலும் அளவுக்கு அதிகமான ரசாயன பூச்சி கொல்லிகள் இருப்பதை படித்தோம். ரசாயன வேளாண்மையில் பூச்சிகளை அழிக்க மேலும் மேலும் அதிக சக்தி கொண்ட ரசாயனங்கள் பயன் படுத்த படுகின்றன.
இவற்றில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்:
- காய்கறிகளையும் பழங்களையும் குளிர்ந்த நீரில் 5 நிமிடம் தேய்த்து நன்றாக அலம்பினால் முக்கால் வாசி
ரசாயன பூச்சி கொல்லிகள் நீருடன் போய் விடும்
- இந்த நீரில் 2% உப்பை சேர்த்து அலம்பினால் 80-90% சதவீத ரசாயன பூச்சி கொல்லிகள் நீக்க படும்
- வினிகர் திரவம் (Vinegar) 10% நீர் 90% சேர்ந்த திரவத்தில் காய்கறிகளையும் பழங்களையும் சிறிது நேரம் ஊற வைத்து அலம்பினால் நல்ல பயன் கிடைக்கும்
- ரசாயன பூச்சிகொல்லிகள் அதிகம் தாங்கும் கத்திரி, திராட்சை மற்றும் மடிப்பு உள்ள காய்கறிகளான வெண்டை, ஆபிள் போன்றவற்றில் உள்ள இடுக்குகளையும் நீர் படும் முறையில் அலம்ப வேண்டும்
இந்த எளிதான முறைகளால் நம் ஆரோக்யத்தை நாம் பாதுகாத்து கொள்ளலாம்
நன்றி:NDTV
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இன்றைய நாளில் மிகவும் தேவையான தகவல். மிக்க நன்றி
நன்றி! – admin