பிளாஸ்டிக் அரிசி!!

மேகியை விடுங்க! நாம் 3 வேளையும் உட்கொள்கிற உணவான அரிசியிலும் கைவைத்துவிட்டார்கள். அதுவும் எப்படி…?

சீனாவில் ‘பிளாஸ்டிக் அரிசி’ கலப்படம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அரிசியில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய வழக்கறிஞர் சுக்ரிவா துபே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள  அரிசி மொத்த வியாபாரிகள், வர்த்தகர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அரிசியை விற்பனை செய்கிறார்களா என்று ரெய்டு நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை வரும் ஆகஸ்டு 20-ம் தேதி  விசாரிப்பதாக நீதிபதிகள்  ரோஹிணி, ஜெயந்த்நாத் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி என்றால் என்ன?

சீனாவின் ஷாங்க்ஷி பகுதியில் இருந்துதான் இந்த பிளாஸ்டிக் அரிசி பற்றிய தகவல்கள் பரவின. இந்த இடம் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் செயற்கை பிசின் அதிகமாக புழங்கும் இடம். சீனிக் கிழங்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுகிறதாம் இந்த பிளாஸ்டிக் அரிசி.

சீனாவின் ரெஸ்டாரன்ட் சங்கம் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் பிளாஸ்டிக் அரிசியை மூன்று கப் அளவில் உட்கொண்டால், அது ஒரு முழு பிளாஸ்டிக் பையை சாப்பிட்டதற்கு ஒப்பானது என்று கூறி வயிற்றில் புளியை(பிளாஸ்டிக்?) கரைக்கிறது!

Photo courtesy: Vikatan
Photo courtesy: Vikatan

பிளாஸ்டிக் அரிசியைச் சாபீட்டால் உயிரையே பறிக்கக் கூடிய இரைப்பை பிரச்னைகள் வரும் என்று சொல்கிறார்கள்.

Photo courtesy: Vikatan
Photo courtesy: Vikatan

பிளாஸ்டிக் அரிசியை எப்படிக் கண்டுபிடிப்பது?

–  பிளாஸ்டிக் அரிசியை சமைத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்!

– சாதாரண அரிசி கையில ஒட்டிக்கொள்வதுபோல பிளாஸ்டிக் அரிசி கையில் ஒட்டாது.

– சமைத்தபின், சாதாரண அரிசியைவிட அதிக நேரம் கெடாமல் இருக்கும்.

– சமைத்தபின் குளிரூட்டினால், பார்ப்பதற்கு Styrofoam போல் இருக்கும்

– நெருப்பில் காட்டினால், சீனிக் கிழங்கு வாசனை வரும்.

– பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தி சூப் செய்தால், அதன்மேலே மெல்லிய பிளாஸ்டிக் லேயர் படரும். இந்த லேயரை எடுத்து வெயிலில் காயவைத்தால், பிளாஸ்டிக்கே(!) கிடைக்கும். இதில் எளிதாக தீயும் பற்றிக்கொள்ளும்.

Photo courtesy: Vikatan
Photo courtesy: Vikatan

கேரளாவின் கோழிக்கோடு நடப்புரம் சந்தையில் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி:விகடன்.com


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *