கர்நாடகா அரசு, தினமும், 148 கோடி லிட்டர் கழிவுநீரை, நீர்நிலைகள் வழியாக தமிழகத்திற்கு அனுப்புவதும், காவிரியில் மட்டும், 59 கோடி லிட்டர் கழிவுநீர் கலக்க விடுவது, இதனால் செத்து மிதக்கும் பறவைகளை பற்றியும் பற்றி முன்பே படித்தோம். இதை பற்றிய ஒரு அப்டேட் ஹிந்துவில் இருந்து
காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு 8 வாரங்களுக்குள் பதில ளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய சிறு பாசனங்கள் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘நாள் ஒன்றுக்கு 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தமிழகத்திற்கு செல்கிறது. 889 மில்லியன் லிட்டர் கழிவுநீர் பினாகினி மற்றும் தென் பெண்ணையாறு வழியாகவும், எஞ்சிய கழிவுநீர் அர்க்காவதி வழியாகவும் காவிரியில் கலந்து தமிழகத்திற்குள் செல்கிறது’ என்று தெரிவித்திருந்தார். இதை அடிப்படையாக வைத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு மனுவில், ‘காவிரி யில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை செய்ததில் அனுமதிக் கப்பட்ட அளவைவிட அதிகமாக கழிவுநீர் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரமாக உள்ள காவிரியில் பெங்களூரு நகரத் தின் கழிவுநீர் கலப்பதால், காலரா, மலேரியா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. வேதிப்பொருள் கலப்பதால் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, கழிவு நீரை சுத்திகரித்து காவிரியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப் பட்டிருந்தது. இம்மனுவில், மத்திய அரசையும் இணைத்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழக அரசு தெரிவித்துள்ள குற்றச் சாட்டுகளுக்கு 8 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கர்நாடகா மாநிலம் மட்டும் அல்ல தமிழகத்தில் பவாணி ஆறு வழியாக காகித ஆலை கழிவுகள் சாய ஆலை கழிவுகள் வழியோர நகர் பகுதியில் உள்ள சாக்கடை நீர் பவாணி கூடுதுறை பகுதியில் காவிரியுடன் கலந்து மாசு ஏற்படுகிறது. நொய்யலாறு பற்றி கேட்க வேண்டாம் திருப்பூர் பகுதிகளில் உள்ள சாயபற்றைகளை சுத்திகரிப்பு செய்து நீரை வெளியேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் ஆனை இருந்தும் அதை பின்பற்றாமல் பல அலைகள் திருட்டுத்தனமாக தண்ணீரை ஆற்றில் திறந்து விடுகிறார்கள் என் விவசாய கிணற்றில் 2400 (இது உச்ச நீதிமன்றம் அனுமதித்த உச்ச பட்ச அளவாகும்) இருக்க வேண்டிய T D S அளவு 10800 என்ற அளவில் உள்ளது இது குறித்து பல புகார் செய்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நீர் கருர் மாவட்டத்தில் காவிரியுடன் கலந்து மாசு ஏற்படுகிறது இந்த நீரை தான் விவசாயம் மற்றும் பல குடி நீர் திட்டங்களுக்கு பயன்படுத்த படுகிறது
மணி 9994447737
அன்புள்ள மணிவர்மனுக்கு
நீங்கள் கூறி உள்ளது 100% உண்மை. அமராவதி ஆறு, பவானி ஆறு போன்றவை சாய ஆலைகளின் கழிவுகளால் நிறம் மாறி மாசு பட்டு விட்டன. நீர், காற்று, நிலம் மூன்றும் ஆரோக்யமாக இருந்தால் மட்டுமே மனிதன்
ஆரோக்யமாக வாழ முடியும். கையில் அளவுக்கு மீறி பணம் இருந்தால் மட்டும் போடுமா? இன்றைய பொருளாதாரத்தின் சாபம் இது.
-அட்மின்