ஒரு ஏரியை கொல்ல மிகவும் எளிதான வழி அந்த எரி நடுவே ஒரு ரோடு போடுவதுதான்.
இப்படி செய்தால் ஏரி துண்டுதுண்டாக உடையும் (Fragmented) . சிறிய சிறிய குட்டைகளாகும். ரோடு வந்த உடன் இந்த ரோட்டில் வந்து இரவோடு இரவாக குப்பை, கோழி கழிவு, கட்டட உடைப்பு கற்கள் போட்டு நிரப்புவர். சிறிது நாளில் அந்த ரோடு பக்கத்திலேயே Lakeview apartments என்று கோடிகணக்கில் பிளாட்கள் விற்க படும். இந்த வழிமுறையை பயன்படுத்தியே எத்தனையோ ஏரிகளை கொன்றாகி விட்டது. இப்போது சென்னையில் போரூர் ஏரியில் ரோடு போடுவதை மதிய பசுமை ஆணையம் தற்காலிக தடை செய்துள்ளது. இதை பற்றிய செய்தி விகடனில் இருந்து..
போரூர் ஏரியில் சாலை அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை!
சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியின் குறுக்கே சாலை அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு போரூர் ஏரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போரூர், முகலிவாக்கம், காரம்பாக்கம், கொளுத்துவான்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு நிலத்தடி நீருக்கு ஆதாரமாகவும் போரூர் ஏரி இருந்து வருகிறது.
இந்நிலையில், தனியார் பல்கலைக் கழகம் ஒன்று போரூர் ஏரியை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதற்கு சாதகமாக போரூர் ஏரியில் கரை அமைக்க பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து போரூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போரட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போரூர் ஏரி விவகாரம் பசுமைத் தீர்ப்பாயம் சென்றது. மேக நாதன் என்பவர் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி, ஏரியின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்ததோடு, ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலையை அகற்றவும் உத்தரவிட்டார்.
நன்றி: விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்