இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்

வணக்கம் ,
வருகிற டிசம்பர் 30ம் தேதி 2014 செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு மேல் மறைந்த இயற்கை வாழ்வியல் அறிஞர் திரு. கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது, தமிழகத்திலுள்ள அனைத்து நம்மாழ்வார் ஐயாவின் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. எனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞசர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் “ வானகம் ஒருங்கிணைப்புக்குழு “ அன்புடன் அழைக்கிறது.
இடம் : வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்), கடவூர், கரூர்.

நம்மாழ்வார் ஐயா நினைவு விருது :

நம்மாழ்வார் ஐயாவின் வழியில் சுயசார்பு வாழ்க்கை வாழும் சமூகப் போராளிகள் இருவருக்கு “நம்மாழ்வார் ஐயா நினைவு விருது “ ஆனது ஐயாவின் பிறந்த நாளான ஏப்ரல் 6 ம் தேதி வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு மற்றும் அறிவிப்புகளும் இந்நாளிலே அறிவிக்கப்படும். இவ்விருதானது பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே நடைபெறும். இவ்விருதுக்கான அன்பளிப்பு போரளிகளின் வாழ்வை மேம்படுத்துவோடு இல்லாமல், அவர்களின் பொதுவாழ்க்கைக்கான அங்கீகாரமாகவும் இருக்கும்.

மேலும் இவ்விருது இளைய தலைமுறையினருக்கு பெரும் உந்துதலாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், போராளிகள், இளைஞர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை பொருள்களாகவோ அல்லது பணமாகவோ அளிக்கலாம்.

வானகம் குழுவினரும் இந்த பரிசுத் தொகையில் தங்களின் பெரும் பங்களிப்பை அளிக்க உள்ளனர். இந்த கணக்குகள் பொதுமக்களின் பார்வைக்கு அளிக்கப்படும்.

நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் :
1. ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
2. சுழலியாளர்களின் சிறப்புரை
3. பராம்பரிய விதைகள் பரிமாற்று விழா
4. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள்
5. மரக்கன்றுகள் நடும் விழா
6. நூல் வெளியீட்டு விழா என இன்னும் பல சூழலியல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. மேலும் பல அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர்புக்கு : 95666 67708, 84897 50624, 94880 55546

எனவே இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞசர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் “ வானகம் ஒருங்கிணைப்புக்குழு “ அன்புடன் அழைக்கிறது.

namm


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *