பசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் பசுவின் கோமூத்திரம் மூலம் தயாரிக்க படுகின்றன.
மாடுகள் இல்லா விட்டால் என்ன பண்ணுவது? நாம் இருக்கிறோமே! ஏற்கனவே, நாம் இன்னொரு ஆராய்ச்சியில், சிறுநீரும், மர சாம்பலும் இணைத்து காய்கறி செடிகளுக்கு கொடுத்தால் செடிகள் நன்றாக காய்க்கும் என்பதைபார்த்தோம். இதோ, இன்னொரு செய்தி:
பின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனித சிறுநீரை நேரடியாக உரமாக வெள்ளரிக்காயகளுக்கு பயன் படுத்தி அதன் மூலம் விளைந்த விளைச்சலை பற்றி ஒரு ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிட்டு உள்ளார்கள்.
இதனை, இங்கே படிக்கலாம்.
இதோ, அதிலிருந்து சில துளிகள்:
- சிறுநீரில், Urea, Nitrogen அதிகமாக இருக்கிறது
- ரசாயன உரங்கள் இடப்பட்ட வயல்களில் விளைந்த விளைச்சலுக்கு இணையாக விளைச்சல்
- ருசியில் எந்த மாற்றமும் இல்லை
- நோய் பரப்பும் பக்டீரியா, வைரஸ் போன்றவை சிறுநீர் மூலம் வெளியேற்ற படுவதில்லை. சிறுநீர் 99% sterile திரவம். சிறுநீரில் கிருமிகள் இருப்பதில்லை அதனால், வெள்ளரிக்காயகளிலும் எந்த விதமான பக்டேரியாக்கள் (coliforms, enterococci, coliphages and clostridia) இல்லை.
- சிறுநீர் மலத்தோடு கலக்க கூடாது. Urinary infection இருக்கும் சிறுநீர் சேர்க்க கூடாது. தனியாக பாட்டிலில் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
இயற்கை உரம் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
sir, I want to know how to pripare muti karisal, using egg and lemon.