தழைச்சத்து உரத்திற்கு அசோலா

  • இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் சமச்சீர் அளவில் அளிப்பதே ஒருங்கிணைந்த உர மேலாண்மையாகும்.
  • தாவர வகை தழைச்சத்து உரமான அசோலா பிற உயிரினங்களோடு சார்ந்து இயங்கும் பெரணி வகை தாவரம்.
  • அனாபீனா அசோலி என்ற நீலபச் சைப் பாசி அசோலாவின் உள்ளிருந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. பயிருக்கு தழைச்சத்து அளித்து மண்ணிற்கு இயற்கை உரமாக மாறி மண் வளத்தை பெருக்குகிறது.
  • விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால் பகுதிகளிலும் அசோலா இயற் கையாகவே வளர்ந்து இருப்பதை கவனித்து சேகரித்து நெல் வயல்களில் தூவி வளர்கலாம.
  • ஒரு ஏக்கருக்குத் தேவையான அசோலாவை உற்பத்தி செய்ய 4 சென்ட் நாற்றங்கால் போதுமானது.
  • ஒரு சென்ட்டுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் 10 கிலோ மாட்டுச்சாணமும் இட்டு 5 – 10 செ.மீ., வரை தண்ணீர் தேக்க வேண் டும்.
  • அதன்மேல் ஒரு சென்ட்டுக்கு 8 கிலோ அசோலா வீதம் பரப்பி விட வேண்டும்.
  • இந்த நாற்றங்காலிலிருந்து 7 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சென்ட்டில் 50 கிலோ என்ற அளவில் அசோலா கிடைக்கும்.
  • அசோலாவை ஏக்கருக்கு 100 கிலோ வீதம் பரப்பி ஒரு வாரம் தண் ணீர் தேக்கி வைத்திருந்து சேற்றில் மிதித்துவிட்டு பின் நடவு செய்ய வேண்டும்.
  • அவ்வாறு அசோலா இட்ட வயலில் 25 சதவீதம் தழைச்சத்து உரத்தை குறைக்கலாம்.

இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ளார.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *