நம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான வானகம் இயற்கை வேளாண்   பண்ணையில் வருகிற ஏப்ரல் மாதம் 21.4.2012  மற்றும்  22.4.2012     ஆகிய   நாட்களில்   இயற்கை வாழ்வியல் பயிற்சி  நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.   செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை ” இயற்கை ஞானி நம்மாழ்வார் ”  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

எங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 500 மட்டும்.

பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :

M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் – 621 311
(  குறிப்பு : ஏப்ரல் 17ம் தேதிக்குள் மணி ஆர்டரை அனுப்பும்படி  கேட்டுக்கொள்கிறோம். )

தங்குமிடம், உணவு   இலவசம்.  முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு   தொலைபேசி எண் :              09786071727,             09952324855


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *