நெற்பயிருக்கு உயிர் உரங்கள்

முக்கூடல் வேளாண்மை உதவி இயக்குநர் செந்தில்குமார் பாப்பாக்குடி வட்டார விவசாயிகளுக்கு கூறிஇருப்பதாவது:

  • ஆசோஸ்பைரில்லம் உயிர் உரமானது காற்றில் உள்ள தழைச்சத்தை எடுத்து நெல் பயிரிருக்கு கொடுப்பதோடு மண்ணிலும் நிலை நிறுத்தும்.
  • இதனால் நெல் பயிரில் வேர் வளர்ச்சி அதிகமாகி பயிர் அதிக அளவில் தழைச்சத்தை எடுத்து நன்கு வளர்ந்து அதிக தூர்கள் உருவாகி பயிர் மகசூல் அதிகமாகும்.
  • பாஸ்போபாக்டீரியா உயிர் உரமானது மண்ணில் பயிருக்கு கிடைக்காத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து நெல் பயிர் எளிதில் மணிச்சத்தை எடுத்து மகசூலை பெருக்க வழி வகை செய்கிறது.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான 24 கிலோ நெல் விதையை 24 லிட்டர் நீரில் ஊற வைக்கும் பொழுது அதில் இரண்டு பொட்டலம் நெல் அசோஸ்பைரில்லம் மற்றும் இரண்டு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை கலக்க வேண்டும்.
  • இதன்மூலம் நெல் விதை முளைகட்டும்பொழுது உயிர் உரங்கள் அதில் ஊடுருவி செயல்பட்டு மேலும் பெருகும்.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் நாற்றின் வேரினை நான்கு பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் நன்கு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலந்த கரைசலை 15 முதல் 30 நிமிடம் நனைத்து பின்பு நடவு செய்ய வேண்டும்.
  • மேலும் நடவு வயலில் நடவு செய்வதற்கு முன்பு 20 கிலோ பொடி செய்த நன்கு மக்கிய தொழு உரத்துடன் நன்கு பொட்டலம் நெல் அசோஸ்பைரில்லம் மற்றும் நான்கு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை கலந்து வயலில் சீராக தூவவேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் ரசாயன உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இட கூடாது.

விவசாயிகள் உயிர் உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி மண் வளம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். உரச்செலவைக்குறைத்து அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *