சம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 39, தாபட்ளா, கே.ஆர். எச். 2, கோ.ஆர்.எச்.3, வெள்ளை பொன்னி போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பட்டத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்தால் இயற்கையாக பூச்சிகளை கட்டு படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை:
- ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் “டி’ வடிவம் கொண்ட ஐந்தடி குச்சிகளை 30 எண்களுக்கு குறையாமல் நட்டு பறவை குடில் அமைக்க வேண்டும்.
- இதனால் பகலில் குச்சியின் மேல் இரட்டை வாள் குருவி, மீன் கொத்தி குருவிகள் போன்றவை அமர்ந்து இளம் பயிரை தாக்கும் குருத்துப்பூச்சி, இலை சுருட்டு புழுக்கள், தாய் அண்டு பூச்சிகளையும் இளம் பருவ புழுக்களையும் பிடித்து தின்பதால் இவைகளின் தாக்குதல்களில் இருந்து இயற்கையாகவே பயிர் பாதுகாக்கப்படுகிறது.
- இரவில் குச்சிகளின் மேல் ஆந்தை அமர்ந்து எலியை பிடித்து தின்பதால் எலி தாக்குதலில் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது.
- பறவை குடிலுக்கு தென்னை மரத்தின் அடிமட்டைகளை பயன்படுத்தலாம்.
- மாலை ஆறு மணியளவில் தாம்பாளம் போன்ற அகல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மண்ணெண்ணை, அத்துடன் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி வீதம் மானோபுரொட்டோபாஸ் கலந்து வயல்களின் நடுவே உயரமான ஸ்டூல் அல்லது தட்டியினை வைத்து நடுவே ஒரு செங்கல் வைத்து பெட்ரோமாஸ் லைட் அல்லது காஸ் லைட் அல்லது அரிக்கன் லைட் வாய்ப்பு இருந்தால் மின் விளக்கு ஏதேனும் ஒன்றை பொருத்தில் இரவு எட்டு மணிக்கு எல்லாம் தாய் அந்துப்பூச்சிகளை சேகரித்து அளிக்க வேண்டும்.
- இதனால் பூச்சிகள் பயிரில் முட்டையிட்டு புழுக்கள் வெளிவந்து பயிர்கள் தாக்கப்படுவதை முன் கூட்டியே தடுக்கலாம்.பூச்சிகள் நடமாட்டத்தை அறிந்து முன்கூட்டியே நடவடிக்கையை தொடரலாம்.
- சம்பா பயிரில் மழை மற்றும் குளிர் காலத்தில் இலைப்புள்ளி நோய், இலை கருகல் நோய், குளைநோய், மற்றும் நெல் பழ நோய் போன்றவை தாக்ககூடும்.இதை தடுக்க நாற்றங்காலிலேயே ஐந்து மீட்டர் நீளம், நான்கு மீட்டர் அகலம் உள்ள பாத்தி தயார் செய்து, இதில் ஒரு கிலோ சூடோமோனாஸ் எதிர் நச்சுயிரை கரைத்து ஒரு ஏக்கர் நாற்றினை நினைத்த பிறகு நடவு செய்திட வேண்டும்.
- நடவு வயலில் ஒரு கிலோ சூடோமோனோஸ்டன், பத்து கிலோ மக்கிய எருவை கலந்து பின்பு தூவவேண்டும்.
இவ்வாறு திருத்துறைப்பூண்டி வோளண்மை உதவி இயக்குனர் நடசேன் தெரிவித்தார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை”