பஞ்சகவ்யா இயற்கை உரமாகவும், பயிர்களுக்கு பூச்சி எதிர்ப்பு திறன் தருவது மட்டுமில்லாமல், விதை நேர்த்திக்கும் பயன் படுத்தலாம்.
பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பதை ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விளக்குகிறார்:
- ஏக்கருக்கு தேவையான விதை நெல்லை தெளிப்புக்கு முன் நூறு லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவை கலந்து விதை நெல்லை சாக்குடன் போட்டு 12 மணி நேரம் ஊரவைக்க வேண்டும்.
- பின் விதை நெல்லை எடுத்து சாக்குப்போட்டு மூடி வைத்து 12 மணி நேரத்துக்குப்பின் 15 லிட்டர் தண்ணீர் 50 மில்லி பஞ்சகாவ்யவை ஊற்றி, கலக்கி விதை நெல்மூட்டை முழுவதும் ஊற்றி சாக்கு போட்டு இருக்கமாக மூடிவைக்க வேண்டும்.
- பத்து மணி நேரத்துக்குப்பின் விதையை பார்த்தால் அனைத்து விதைகளும் பூண்டு முளைத்து வெள்ளி கம்பி போல் இருக்கும்.
- அதன் பின் விதையை தெளித்து விடவேண்டும்.
- செம்மை நெல் சாகுபடியில் குறுகிய கால பயிராக இருந்தால் பத்து நாட்களிலும், மத்திய கால பயிராக இருந்தால் 14 நாட்களிலும், நீண்ட கால பயிராக இருந்தால் 16 நாட்களிலும் நடவு செய்ய வேண்டும்.
- சாகுபடியில் முதல் நிலை விதை நேர்த்தி மிகமுக்கியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் பழுது இல்லாமல் விதை முளைக்கும்.
- நோய் தாக்குதலை விதையிலேயே தடுக்க முடியும். பயிர் செழிப்பாக வளர ஊட்டச்சத்தாகும். எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் பூஞ்சானை இயற்கை விவசாய முறையில் எளிமையாக செய்வதுதான் பஞ்கவ்யா நேர்த்தி.
மேலும் தகவல்களுக்கு கிரியேட் ஜெயராமனிடம் 09443320954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நன்றி: தினமலர்
பஞ்சகவ்யா பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்