புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் புழுக்களின் மீது நோயை உருவாக்கி அழிக்கும் வகையிலான நவீன 2 புதிய உயிரி பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரித்துள்ளது.
இவற்றில் “பெவேரியா பேசியானா’ (beauveria) என்ற பெயரில் தயாரிக்கப்படும் உயிரி பூச்சிக் கொல்லி மருந்து பவுடர் வடிவத்தில் இருக்கும்.இது ஒரு நன்மை தரும் வெண்மை பூஞ்சானம். நெல், தக்காளி, மணிலா, பருத்தி, பயறு வகைகள், சூரிய காந்தி,பச்சை மிளகாய், கனகாம்பரம், சாமந்தி, கரும்பு, தென்னை, கத்தரி, பீன்ஸ், வெண்டை,அவரை, மா, தேக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களைத் தாக்கும் பூச்சி, வண்டுகள், புழுக்கள் மீது நோயை உருவாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்ததாகும்.
இதே போல, “என்.பி. வைரஸ்’ (nucleo polyvendro virus) என்ற பெயரிலான உயிரி பூச்சிக்கொல்லி மருந்து நன்மை தரும் வைரஸ் ஆகும். இது திரவ வடிவத்தில் இருக்கும். இதுவும் புழுக்களின் மீது நோயை உருவாக்கி அழிக்க வல்லதாகும்.குறிப்பாக, தக்காளியைத் தாக்கும் காய்ப்புழு, ஹீலியாதீஸ் என்ற பச்சைப் புழு உள்ளிட்டவைகளை இது தாக்கும். பச்சைப் புழு தாக்கும் மற்ற பயிர்களான மணிலா, பருத்தி, உளுந்து, பயறு வகைகள், காய்கறிகள் தக்காளி, மிளகாய், காலிபிளவர், முட்டைகோஸ், கனகாம்பரம், சாம்பந்தி உள்ளிட்ட பயிர்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
இது விலை மலிவானது. ஓர் ஏக்கருக்கு ரூ.150 மட்டுமே செலவாகும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துக்கான செலவைக் காட்டிலும் 3-ல் ஒரு பங்குதான் இதற்குச் செலவாகும்.
உயிரி பூச்சிக் கொல்லி மருந்தாக இருப்பதால், இது சுற்றுச்சூழலைப் பாதிக்காது. நச்சுத்தன்மையும் கிடையாது. இந்த மருந்தை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருள்களிலும் நச்சுத்தன்மை இருக்காது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், மேட்டுப்பாளையம், புதுவை – 605009
தொலைபேசி எண்: 04132271922
இயற்கை பூச்சி கொல்லிகளை பற்றிய எல்லா இடவுகளையும் இங்கே படிக்கலாம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
2 thoughts on “புதிய உயிரி பூச்சிக்கொல்லி அறிமுகம்”