பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்

வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன.

  • இந்தியாவில் இது இயல்பாக வளர்ந்து காணப்படுவதுடன் காலங்காலமாக மருத்துவம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்று விளங்குவதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இலை களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை.
  • இப்பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன்மைகளை கொண்டுள்ளது.
  • இதேபோல் கொசு விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
  • வில்வ விதைகளில் இருந்து பெட்ரோலியம் ஈதரைப் பயன்படுத்தி எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டது. இதனை ஆய்வகச் சூழலில் வனமர இலை உண்ணிகளுக்கு எதிராக பயன்படுத்திப் பார்த்ததில், சாதகமான விளைவுகள் காணப்பட்டன.
  • இவற்றின் ஆய்வுமுடிவுகள் மூலம் வில்வ விதைகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட எண்ணெய், தேக்கு நாற்றுகளைத் தாக்கி அழிக்கும் இலையுண்ணிகளுக்கு எதிராக செயல்படும் திறன்மிகுந்த உயிர்ம பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த வல்லது என கண்டறியப்பட்டது.
  • குறிப்பாக தேக்கு செடிகள் மற்றும் இள மரங்களைத் தாக்கும் இலையுண்ணி பெருத்த பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. நாற்றங்கால்களிலும் இளவயதுஉடைய மரங்களிலும் முற்றிலுமாக இலைகளைத் தின்றுவிடும் அபாயம் உள்ளது. இவை மரங்களைக் கொன்றுவிடுவதில்லை. மாறாக, மரத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் அனைத்து தேக்கு தோப்புகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை இவை. ஒரு ஆண்டில் எப்போது தாக்கும் என ஊகித்து அறிய இயலாதவை.  எனவே இந்த இலையுண்ணிகளை கட்டுப்படுத்துவது மர சாகுபடியாளர்களுக்கு இருந்துவரும் மிகப்பெரிய சவாலாகும்.

தொடர்பு: இயக்குனர், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், கோவை, 0422248 4100.
-கே.சத்தியபிரபா, உடுமலை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “பூச்சி விரட்டும் பண்பை கொண்ட வில்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *