ஈரோடு அருகே உள்ள கொடுமுடி கிராமத்தில் உள்ள விவசாயி செல்லமுத்து பெருங்காயத்தை பயன் படுத்தி நல்ல மகசூல் பெற்றுள்ளார்.
அவர், பெருங்காயம் பூச்சிகளை கட்டு படுத்துவதாகவும் கூறுகிறார்.
ஒரு ஏகர் நிலத்திற்கு, அவர் ஒரு கிலோ பெருங்காயத்தை ஒரு சாக்கு பையில் போட்டு நீர் பாசனம் இருக்கும் கால்வாயில் விட்டு வைத்தார். நீரில் பெருங்காயம் கரைந்து செடிகளுக்கு செல்கிறது.
இந்த முறையால், பயிர்கள் நன்றாக வளர்வது மட்டும் இல்லாமல், பூச்சிகளின் தாக்குதலும் குறைகிறது என்கிறார் இவர்.
இந்த முறையை அவர் ஊரில் உள்ள மற்ற விவசாயிகள் , மல்லிகை, அரிசி, நிலகடலை, தக்காளி, கத்திரி போன்ற பயிர்களில் பயன் படுத்தி பயன் பெற்றுள்ளனர் என்கிறார் இவர்.
இவரை தொடர்பு கொள்ளும் முகவரி: திரு செல்லமுத்து, கருக்கம்பாலயம், ஊஞ்சலூர் போஸ்ட், கொடுமுடி, ஈரோடு தாலுகா, தமிழ்நாடு. போன்: 04204266127, அலைபேசி எண்:9486602389.
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்