மனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு

மனித சிறுநீர் எப்படி பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உரமாக பயன் படுத்தி காய்கறிகள் பயிர் இடுகிறார்கள் என்றும் முசிறியில் சிறுநீரை பயன் படுத்தி Struvite என்ற உரம் தயாரிப்பது பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம்.

Struvite உரம் செய்முறை எப்படி என்று சுவிட்சர்லாந்த் நாடு விஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் இதை பற்றி ஒரு ஆராய்ச்சி மேற் கொள்ள போவதாக தினமலரில் செய்தி வந்துள்ளது:

கடலூர் : பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது. பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.

மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையும் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனமான வேர்எவர் நீட் இணைந்து வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கத்தினை ஆய்வு செய்ய உள்ளன.

இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதில் கடலூரில் உள்ள பிளஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தவுள்ளது. நெல், கத்தரி, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டம் வாயிலாக மனிதக்கழிவுகள் மூலம் வேளாண்மைக்குத் தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற வாய்ப்புள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன், வேளாண்புல முதல்வர் முனைவர் வசந்தகுமார் முன்னிலையில் இத்திட்டத்திற்கான முதல் தவணையாக 2 லட்சம் ரூபாய் காசோலையாக கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேர்எவர் நீட் உலகத் தலைவர் டேவிட் கிராஸ் வெல்லர் இந்திய இயக்குனர் பரமசிவம் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனம் தலைவர் அந்தோணிசாமி பங்கேற்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *