தேவையான பொருட்கள் நூறு லிட்டர் 5 % வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பதற்கு
- நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ
- தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர்
- சோப்பு – 200 கிராம்
- மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக
செய்முறை
- தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் (5 கிலோ).
- நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை கவனமாக அரைக்க வெண்டும்.
- இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
- மரத்தாலான கரண்டியைக் கொண்டு காலை நேரத்தில், கரைசல் நிறம் பால் போன்ற வெண்மையாகும் வரை நன்றாகக் கலக்கி விட வேண்டும்.
- இரண்டு அடுக்கு மெல்லிய மஸ்லீன் துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக ஆக்க வேண்டும்.
- இதனுடன் 1 சதவிகிதம் சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்)
- பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.
குறிப்பு
- வேப்பம் கொட்டைகள் அதிகமாகக் கிடைக்கும் காலத்தில் ஒன்று சேர்த்து காற்றுபட நிழலில் உலர்த்த வேண்டும்.
- எட்டு மாதத்திற்கும் மேற்பட்ட வேப்பம் விதைகளை உபயோகித்தல் கூடாது. எட்டு மாதத்திற்கும் மேல் சேமித்து வைக்கப்பட்ட வேப்பம் விதைகள் தங்களுடைய செயல்படும் திறனை இழக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால், அவைகள் வேப்பங்கொட்டை சாறு தயாரிப்பதற்கு ஏற்றதாய் இருக்காது.
- எப்பொழுதும் புதிதாக தயாரித்த வேப்பங்கொட்டை கரைசலையே பயன்படுத்த வேண்டும்.
- மதியம் 3.30 மணிக்கு பின்பு வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்