கேரளாவில் ராட்சச ஆப்ரிக்க நத்தை பெருகி வருகிறது. இதனால், வேளாண்மையும் சுற்று சூழலும் கெட்டு வருகிறது.
உலக மயமாக்கல் மூலம் வர்த்தகம் அதிகம் ஆகி கொண்டே வருகிறது. கண்டைனர் Containers மூலம் பொருட்கள் ஒரு கண்டத்தில் இருந்து எளிதாக கப்பல் மூலம் இன்னொரு கண்டத்திற்கு போகிறது. அப்போது, அவற்றோடு சேர்ந்து, ராட்சச ஆப்ரிக்க நத்தை இனமும் கேரளாவிற்கு வந்து உள்ளது.
இந்த இனத்திற்கு இங்கே இயற்கையான எதிரி இல்லாதால், தாறு மாறாக பெருகி வருகிறது.
நிலத்தில் உள்ள பொந்துகள், மரங்கள், வயல்கள் எல்லாவற்றிலும் பெருகி வருகின்றன. வாழை, நெல், பப்பாளி போன்றவை இவற்றுக்கு மிகவும் இஷ்டம். தென்னையில் உள்ள இளம் இலைகளை தின்று விடுகின்றன. வீட்டுக்கு உள்ளே வந்து பயமுறுத்து கின்றன. இவற்றை புகையிலை மற்றும் உப்பு சேர்த்து தெளித்தால் இடத்தை காலி பண்ணுகின்றன.
உலகமயமாக்கல் முன்பே நம் நாட்டுக்கு வந்த ராட்சசர்கள் பார்தேனியும். அதையே ஒழிக்க முடிய வில்லை. இப்படி பட்ட படை எடுப்பால், நம் சுற்று சூழல் பாதிக்க படுவது தடுப்பது கடினம் ஆகி வருகிறது..
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நத்தை உணவாக பயன்படும் என்பதை அறிவேன்.அதனால் ஏற்படும் இழப்பை இன்றுதான் அறிந்தேன்…நன்றி