உளுந்து சாகுபடியில் அதிக மகசூல்!

உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

  • கோடை பருவத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்கள் உளுந்து பயிர் சாகுபடிக்கு ஏற்ற தருணமாகும்.
  • இதற்கு ஏற்ற ரகம் ஆடுதுறை 5. வம்பன் 5,6. ஐ.டி.யூ 941, ஆகியவையாகும்.
  • விதைப்பு செய்தவற்கு முன்பாக விதை மூலம் பரவக்கூடிய வேரழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு 1 கிலோ விதைக்கு டிரைகோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூசானம் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம்  2 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • பின்னர் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் உரத்தை 200 கிராம் அத்துடன் அசோஸ்பைரில்லம் 200 கிராம் என்ற உயிர் உரம் சேர்த்து 160 மில்லி ஆறிய  அரிசி கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 1 நாள் முழுவதும் நிழலில் உலர்த்தி  பின்னர் உயிர் உர நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்கு பின் விதைப்பு செய்ய வேண்டும்.இதனால் தழைச்சத்து இடுவதை குறைத்து கொள்ளலாம். சாகுபடி செலவு குறைகிறது.
  • தரிசு நிலத்தில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு  8 கிலோ விதை போதுமானது. நஞ்சை தரிசில் விதைப்பு செய்யும்போது 1 ஏக்கருக்கு  10 கிலோ விதை போதுமானது.
  • இதை அறுவடை செய்வதற்கு 8 லிருந்து 10 நாட்களுக்கு முன்பாக விதை நேர்த்தி செய்து விதைகளை தூவ வேண்டும்.அப்போதுதான் அனைத்து விதைகளும் முளைக்கும்.
  • இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடிக்கும்போது எக்டேருக்கு 630 கிலோ வரை மகசூல் பெறலாம்.
  • தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதை விநியோகிக்கப்பட்டு வருகிறது. வம்பன் 5, 6, ஆடுதுறை 5, ஐ.டி.யு 941 ஆகிய உளுந்து விதைகள் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் போதுமானளவு இருப்பில் உள்ளது. இத்தகவலை வேளாண் உதவி இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *