பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
- பண்ருட்டி வட்டாரத்தில் பூ மற்றும் காய் பருவத்தில் உள்ள உளுந்து மற்றும் பச்சை பயிரில் பச்சை காய் புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
- இவற்றை தவிர்ப்பதற்கு ஆரம்ப நிலையில் இலைகள் உதிரும் காயின் உள்ளே புழுக்கள் தலையை உள்ளே விட்டு உடலை வெளிப்பக்கம் வைத்திருக்கும். காய்களில் வட்ட வடிவ துளைகள் இருக்கும். பூச்சியின் முட்டைகள் வட்ட வடிவில் பால்வெள்ளை நிறத்தில் தனித்தனியாக காணப்படும். புழுக்கள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறம் வரை மாறி மாறி தோன்றும். பழுப்பு நிற வரிகள் உடலின் பக்கவாட்டில் இருக்கும்.
- கூட்டுப்புழு நிறத்தில் மண் இலை, காய் பயிர், குப்பைகள் காணப்படும். தாய்ப்பூச்சி மங்கிய பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் தடித்து காணப்படும்.
- இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றை கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம்.
- 50 பறவை தாங்கிகள் வைக்கலாம்
- வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
விபரங்களுக்கு பண்ருட்டி வேளாண்மை அலுவலரை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்