இலைக்கழிவுகளை மண்புழு மூலம் உரமாக்கும் நுட்பம்

மரப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்ஸின் பலவகை என்சைம்கள், கிரியா ஊக்கிகள், ஹார்மோன்கள், வைட்டமின் சத்துக்கள் ஆகியவை மண்புழு உரங்களில் உள்ளன.

 

  • சில தேர்ந்தெடுக்கப்பட்ட கழிவுகளான காப்பி செடிகளின் பழத்தோல், தேக்கு, வாகை இலைகள், சொர்க்கமர விதையுரைகள், புங்கன் விதையுரைகள் ஆகியவற்றை மண்புழுவின் மூலம் மக்கும் செல்லாக மண்புழுக் கழிவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.
  • இக்கழிவுகளில் மக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறியவும், காட்டாமணக்கு, சவுக்கு நாற்றுகளில் மக்கிய உரத்தின் தாக்கத்தை கண்டறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இதில் “யூட்ரிலஸ் யூஜெனியே’ என்ற மண்புழு ரகம் பயன்படுத்தப்பட்டது.
  • பாரம்பரிய முறையில் மக்குதல் உரத்தயாரிப்பு முறைகளை விட மண்புழுக்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் கழிவுகளை சத்துக்கள் மிகுந்த உரமாக மாற்றலாம் என்பது மக்கும் உர தொழில்நுட்ப ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
  • மக்கிய உரங்களில் சத்துக்கள் வேறுபட்டாலும் பொதுவாக மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகமாக இருப்பதும் பல ஆய்வுகளின் முடிவாகும்.
  • தழைச்சத்து மண்புழுக்களால் தயாரிக்கப்பட்ட தேக்கு இலைகளில் அதிகமாகவும், மணிச்சத்தும், சாம்பல் சத்தும், புங்கம் விதை யுரைகளில் அதிகமாகவும் உள்ளன.
  • காப்பி பழத்தோலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மண்புழு உரத்தில் பாக்டீரியா, பூஞ்சாணம், “ஆக்டினோமைசீட்ஸ்’ அசிட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம், பேரிங்கியா மணிச்சத்தைக் கரைக்கும் நுண்ணுயிர்கள் அதிகமாக இருப்பதும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
  • இத்தகைய மண்புழு உரத்தில் ஆக்ஸிஜனேற்ற இறக்க வினைகளில் ஈடுபடும் மண் நுண்ணுயிரின் வினையூக்கி அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது.
  • வாகை இலைகளின் மூலம் உருவாக்கப்பட்ட மக்கிய உரத்தில் அமிலபாஸ்பேட்ஸ் நொதிப்பொருள் உருவாக்கம் அதிகமாக உள்ளது.
  • காபி பழத்தோல், சொர்க்க மரங்களில் காரபாஸ்பேட்ஸ் நொதிப்பொருள் அதிகளவில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும் தாவர வளர்ச்சி ஊக்கியான இண்டோல் அசிடிக் அமிலத்தில் அளவு வாகையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மண்புழு உரத்தில் அதிகமாக உள்ளது.
  • மக்கும் தொழில்நுட்பம் ஆய்வுகளின் மூலம் மண்புழு உரத்தின் மக்கும் தன்மை அதிக அளவில் இருப்பது அறியப்பட்டுள்ளது.
  • மக்கும் விகிதம் தேக்கு இலைகளில் மிகுந்து காணப்படுகிறது. சொர்க்க மரம் காபி பழத்தோலில் மக்கும் நிலை அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
  • காட்டாமணக்கு, சவுக்கு, நாற்றுகளில் மண்புழு உரம், வேர் உட்பூசண நுண்ணுயிரிகளின் கலவைகளின் தாக்கம் பதிவு செய்யப்பட்டது.
  • பல்வேறு ஆய்வுகளின் மூலம் தரமான காட்டாமணக்கு நாற்றுகளை காபி பழத்தோல் மண்புழு உரம் மூலம் உருவாக்கலாம் என்பது தெளிவாகி உள்ளது. சவுக்கைப் பொறுத்தவரையில் தேக்கு இலைகளிலிருந்து பெறப்பட்ட மண்புழு உரமும், வேர் உட்பூசண நுண்ணுயிர்களின் கலவையும் நாற்றுக்களின் வளர்ச்சியை அபரிமிதமாக ஊக்குவித்துள்ளன.
  • இந்தியாவில் 384 வகையான மண்புழுக்கள் உள்ளன. இவற்றில் 6 வகையான மண்புழுக்கள் மட்டுமே வணிக ரீதியான மண்புழு உரம் தயாரிக்க உகந்தவை.
  • இவை வனங்களில் மண்ணில் இயற்பியல், வேதியியல் தன்மை, ஊட்டச்சத்து சுழற்சி ஆகியவற்றை சீர்செய்து பாதுகாக்கின்றன.
  • (தகவல்: முனைவர் மா.கிருபா, முனைவர் த.கலைச்செல்வி, முனைவர் மீ.திலக், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்-641 301. போன்: 04254222 010).
    டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *