தென்காசி:நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலங்களில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிருக்கு பூக்கும் சமயத்தில் ஜிப்சம் இட வேண்டும். ஏக்கருக்கு 80 கிலோ வீதம் செடியை சுற்றி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இதனால் மண் இலகுவாகி பூக்கள் திரட்சியான காய்களாக மாறும்விதைத்த 45ம் நாள் நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என விவசாயிகளை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்