மண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்

தென்னை நார் கழிவு உரம் மண்ணை வளமாக்கி பயிர் விளைச்சலை பெருக்குகிறது என செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 • கழிவு பொருட்களில் இருந்து பயனுள்ள உற்பத்தி செய்து விளை நிலங்களுக்கு இட்டு மகசூலை பெருக்குதல் தொன்று தொட்டு நம் நாட்டில் நிலவி வருகிறது.
 •  அங்கக உரங்களை நாம் அதிகமாக நிலத்திற்கு இட்டு விவசாயம் செய்யும் போது நிலத்தில் வேதியியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் பயிரிடுவதற்கு உகந்ததாக பாதுகாக்கப்படுவதுடன் பயிர் விளைச்சலும் அதிகப்படுகிறது.
 • பொதுவாக நம் நாட்டில் உற்பத்தியாகும் தேங்காயிலிருந்து கிடைக்கும் நார் கழிவானது சீரிய முறையில் பயன்படுத்தப்படாமல் தொடர்ந்து வீணாக்கப்படுகிறது.
 • பெரும்பாலும் அவையாவும் தொழிற்சாலைகள் அருகே பெருங்குவியலாக போடப்பட்டு சுற்றுப்புற சூழலை பெரிதும் பாதிக்கிறது.
 • தமிழகத்தில் மட்டும் குறைந்த பட்சம் 2 லட்சம் டன் தென்னை நார் கழிவு வீணாகிறது.தென்னை நார் கழிவில் எளிதில் சிதைவடையாத சிலிக்கனின் செல்லுலோஸ், கரிமம் உள்ளன.
 • தென்னை நார் கழிவு நிலத்தில் மக்கும் பொழுது தழைச்சத்தின் அளவு குறைகிறது.
 • வீணடிக்கப்படும் தென்னை நார் கழிவை உயிரியல் முறையில் புளுரட்டஸ் என்னும் காளான் வித்தை பயன்படுத்தி மக்க வைத்து ஊட்டமிகு எருவாக்குவதால் அதன் பயிர் சத்து அளவு அதிகரிக்கப்படுகிறது.
 • தென்னை நார் கழிவை மக்க வைப்பதற்கு தென்னை நார் கழிவு ஒரு டன்னுடன், புளுரோட்டஸ் பாட்டில்கள் 5 புட்டிகள், யூரியா 5 கிலோ எடுத்து கொள்ள வேண்டும்.
 • நிழலடியில் 5க்கு3 மீட்டர் சமதள பரப்பில் 100 கிலோ கழிவை சீராக பரப்பி, நன்கு நீர் தெளித்து அதன் மீது ஒரு புட்டி புளுரோட்டஸ் வித்தை சீராக தூவ வேண்டும். இது முதல் அடுக்கு ஆகும்.
 • அதன் மேல் மீண்டும் 100 கிலோ கழிவை சமமாக பரப்பி நன்றாக நீர் தெளித்து ஒரு கிலோ யூரியாவை சீராக தூவ வேண்டும். இது இரண்டாவது அடுக்கு ஆகும்.
 • இவ்வாறு ஒரு அடுக்கு கழிவு மற்றும் ஒரு பாட்டில் புளுரட்டஸ் வித்து மறு அடுக்கு கழிவு மற்றும் ஒரு கிலோ யூரியா என்ற முறையில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு அமைத்து கனிசமாக ஈரத்தை தொடர்ந்து பராமரித்து மக்க விட வேண்டும்.
 • சுமார் 30 முதல் 45 நாட்களில் நன்கு மக்கிய எரு தயாராகி விடும்.இதனை பயன்படுத்துவதால் களிப்பாங்கான மண்ணில் இறுக்கத் தன்மையை குறைத்து நீர் கடத்தும் திறனை அதிகரித்து பயனளிக்கிறது.
 • மணற்பாங்கான மண்ணிலும் மற்றும் மானாவாரி நிலங்களிலும் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தி மண் வளத்தை பெருக்குகிறது. களர் நிலங்களிலும் தோல் தொழிற்சாலை கழிவினால் பாதித்த நிலங்களிலும் உள்ள தங்கை நீக்கி விளைச்சலை அதிகரிக்கிறது.
 • ஊட்டச்சத்துக்கள் மிக்க இந்த எரு அனைத்து வகை நிலங்களிலும் மண்ணை வளமாக்கி விளைச்சலை கூட்ட வல்லது.
 • கழிவு பொருட்களை மக்க செய்து எருவாக்குவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே மண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் விளைச்சலை பெருக்க வேண்டும் என அறிக்கையில் வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “மண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *