மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்

மண் புழு உரம் தயாரித்து வரும் ரங்கசாமி கூறுகிறார் –

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவன் நான். செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள் மட்டுமே. சுற்றுச்சூழலை கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து, மண் புழுக்கள்.

 • இவை, 120க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளன.ஒவ்வொரு வகை மண் புழுவும், வெவ்வேறு விதமான தட்ப வெப்ப சூழலில், வெவ்வேறு ஆழத்தில், மூன்று ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அனைத்து புழுக்களுமே, 45 நாட்களுக்கு ஒருமுறை, 30 முட்டைகள் வரை இடும். அவை, 15 – 20 செ.மீ., வரை நீளமும், 1 கிராம் எடையும் கொண்டவை.
 • விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண் புழு உரங்களில், நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்கள், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள், ஹார்மோன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.
 • முதலில், நிழல் நிறைந்த இடத்தை தேர்ந்தெடுத்து, பின், தொட்டியின் அளவை முடிவு செய்ய வேண்டும்.
 • அதில், அதிகப்படியான நீர் வெளியேற, சிறு துளைகள் இட்டு, செம்மண் அல்லது கரிசல் மண் இட வேண்டும்.
 • அதற்கு மேல், காய்கறிக் கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்பி, 20 நாட்கள் கழித்து, அதன் மேல் மாட்டுச் சாணத்தை கொட்ட வேண்டும். அடுத்த, 10 நாட்களில், மாட்டுச் சாணத்தின் மேல், மண் புழுக்களை விட வேண்டும்.
 • மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, இரு நாட்களுக்கு ஒருமுறை, தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
 • ஒரு மாதத்தில், மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும், மேலே உள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள், உரமாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்தில் இருந்து வாரம் ஒருமுறை, மண் புழு உரத்தை அள்ள வேண்டும்.
 • மூன்று மாத நிறை வில், கீழுள்ள மண் பரப்புக்கு மண் புழுக்கள் சென்றுவிடும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண் புழுக்கள் உருவாகியிருக்கும்.
 • தொட்டியின் ஓரத்தில், சாண உருண்டையை வைத் தால், அதன் வாசனைக்கு புழுக்கள் வந்துவிடும்; அப்போது நீங்கள் உரத்தை எடுத்து விடலாம்.
 • மக்கிய சாணத்தை மட்டுமே போட வேண்டும். ஈரமான சாணத்தை போடுவதால், அதில் உள்ள வெப்பத்தின் காரணமாகவும், வெளியாகும் வாயுவின் காரணமாகவும் புழுக்கள் இறந்து விடுகின்றன. ஈரப்பதம், 60 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு, தேவை அதிகரித்து வருகிறது. மண் புழுக்களை அரசு வேளாண் துறையினரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்

 1. Boomi Prasad.J says:

  ஐயா வணக்கம். நான் விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிரமத்தை சேர்ந்தவன்.நான் பட்ட படிப்பு முடித்துள்ளேன்.எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன்.எனக்கு இயற்கை விவசாயம் மற்றும் மண்புழு உரம் தயாற்கும் முறை பற்றிய பயிசிகள் எங்கு நடை பெறுகின்றன என்ற விவரம் அறிய விரும்புகிறேன். நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *