விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கப்பட வேண்டும் என்று ரசாயனங்கள், உரங்களுக்கான நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சமையல் எரிவாயு உருளைக்கு (LPG gas) மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் மானியம், வாடிக்கையாளருக்கு நேரடியாக வழங்கும் திட்டம் (Direct Benefit Scheme) தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் வாங்கும் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல் உரங்களின் மான்யமும் நேரடியாக விவசாயிகளுக்கு கொடுக்க பரிந்துரை செய்துள்ளது
உரத்துக்கான மானியம் தற்போது உரத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசால் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. சந்தை விலையில், யூரியாவின் விலை டன்னுக்கு ரூ.5,360 என அரசு நிர்ணயிக்குமானால், அப்போது யூரியாவை தயாரிக்க ஆகும் செலவு, சந்தை விலை ஆகியவற்றுக்கு இடையே நிலவும் வித்தியாசத் தொகை, அதை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
கலப்பு உரங்களைப் பொருத்த வரையில், அந்த உரத்தின் விலையை அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சுதந்திரமாக நிர்ணயித்து வருகின்றன. அதேபோல், அந்த உரங்களுக்கான மானியத்தை அரசு நிர்ணயித்து வருகிறது.
இந்த முறைக்குப் பதிலாக, உரத்துக்கான மானியம் விவசாயிகளுக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும்.அவ்வாறு வழங்குவதன் மூலம், உர மானியம் வழங்கும் முறையில் நிலவும் மோசடிகள், குறைபாடுகள், அக்கறையின்மை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் எனக் கருதுகிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
இது நடக்கிற காரியமா? உங்கள் கருத்து என்ன?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
it’s very good plan sir we or well come sir