திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படும் பசுமை கழிவுகள் விவசாயிகளுக்கு ரூ.50க்கு வழங்கப்படுகிறது.திண்டுக்கல் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் பழநிரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதில், நாள் ஒன்றுக்கும் 120 டன் குப்பை சேகரமாகின்றன. அதில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் துப்புரவு பணியாளர்களால் 2 டன் அளவில் பிரிக்கப்படுகிறது. இவற்றில் காய்கறி கழிவுகள், வீடுகளில் சேகரமாகும் காய்கறி மற்றும் சமையல் கழிவுகள் பெரும்பகுதி, பசுமை குப்பைகளாக பிரிக்கப்படுகிறது.
இதுதவிர நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் குப்பைகள் பிரிக்கப்படுகிறது. அவை 20 நாட்கள் முதல் 38 நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு சாக்குப் பையில் அடைக்கப்படுகிறது. இவற்றை விவசாயிகளுக்கு இயற்கை பசுமை உரமாக வழங்ககின்றனர்.
இதற்கு விலையாக மூடை ஒன்றுக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அனிதா கூறுகையில், “”சேகரமாகும் குப்பைகள் முறைப்படி மக்கும் குப்பை; மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. அதை அதிக நாட்கள் இயற்கை முறையில் கிளறிவிட்டு பாதுகாக்கிறோம். கிலோ ரூ.2க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். இயற்கை முறையிலான, பசுமை உரம் என்பதால் பயிர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். எனவே விவசாயிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர், என்றார்.
நன்றி: தினமலர்
இதை மற்ற மாநகராட்சிகளும் பின் படுத்தலாமே? மாநகராட்சிகளி ன் வருமானமும் பெருகும், மக்களுக்கும் நன்மை, குப்பை நாற்றமும் குறையும்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Nice idea
super idea