எலுமிச்சை சாகுபடியில் உயர் மகசூல்

எலுமிச்சை சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் உயர் மகசூல் பெற்று லாபம் ஈட்டலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

lemon

இது குறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 • எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
 • இலைத் திசுத் துளைப் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சிகள், பழம் உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளது.

இலைத் திசுத் துளைப் பூச்சி:

 • இலையின் உள் அடுக்குகளுக்குள் புகுந்து சுரண்டி சாப்பிடும் மெல்லிய புழு இது. தாக்கப்பட்ட இலைகளில் புழுக்கள் ஊடுருவிச் சென்ற பாதை வளைந்து நெளிந்து காணப்படும்.
 • நாளடைவில் காய்ந்து விழுந்து விடும். இப் பூச்சியின் தாக்குதல் காணப்பட்ட மரங்களில் டிரிஸ்டிசா வைரஸ் நோய் எளிதில் தாக்கும்.
 • இந்த நோயை வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பம் எண்ணெய் 3 சதவிகிதம் தெளிக்க வேண்டும்.
 • ஒரு லிட்டர் நீரில் ஒரு மிலி டைக்குளோர்வாஸ் அல்லது மானோகுரோட்டோபாஸ் தெளித்தும் கட்டுபடுத்தலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்:

 • எலுமிச்சையில் தாக்கும் வெள்ளை ஈயை ஒரு லிட்டர் நீரில் 2 மிலி குயினோல்பாஸ் 25 ஈசி மருந்து கலந்து தெளிக்கலாம்.
 • கருப்பு ஈயை ஒரு லிட்டர் நீரில் ஒன்றரை மிலி மானோகுரோட்டோபாஸ் மருந்து கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 • துரு சிலந்தி பூச்சியை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் அல்லது இரண்டரை மிலி டைக்கோபால் மருந்துகளில் ஒன்றைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 • அசுவினி பூச்சியை ஒரு லிட்டர் நீரில் ஒரு மிலி மானோகுரோட்டோபாஸ் அல்லது மிதைல் ஓ டெமட்டான் மருந்துகளில் ஒன்றை தெளிக்க வேண்டும்.

பழம் உறிஞ்சும் அந்துப் பூச்சி:

 • இந்த அந்து பூச்சிகள் பழங்களின் சாற்றை உறிஞ்சு குழல் மூலம் உறிஞ்சி உண்ணும். சாறு உறிஞ்சப்பட்ட பழங்கள் அழுகி உதிர்ந்து விடும். இப் பழங்களில் பூஞ்சாணங்களின் தாக்கமும் எளிதல் உண்டாகும்.
 • அந்து பூச்சிகள் களைகளிலேயே முட்டையிட்டு பெருகுவதால், களைகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
 • பாலிதீன் பை கொண்டு பழங்களைக் கட்டி விட்டு சிறு துவாரங்கள் போடுவதால் காற்றோட்டம் பெருகிப் பூஞ்சாணம் தாக்குவது தவிர்க்கப்படும். பூச்சிகளும் பழங்களை சேதப்படுத்துவது கட்டுப் படுத்தப்படும்.
 • நுனிக் கிளைப் புழுவை காய்ந்த கிளைகளை அகற்றி விட்டு ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி மானோகுரோட்டோபாஸ் அல்லது 2 கிராம் கார்பரில் 50 சதவிகிதம் நனையும் தூள் மருந்துகளில் ஒன்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 • தண்டுப் புழு, நுனிக்கிளைப் புழுக்களை கட்டுப்படுத்த பயிரின் காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி எடுக்க வேண்டும்.
 • வண்டு துளைத்த பகுதியில் 5 முதல் 10 மிலி பெட்ரோல் அல்லது குளோரோபார்ம் உள் செலுத்தி காற்றுப்புகாதவாறு அடைத்து விட வேண்டும். முறையாக கோடை உழவு மேற்கொள்ள வேண்டும்.
 • பயிரைத் தாக்கும் நுனிக்கிளை வாடல் நோயை, பாதிக்கப்பட்ட நுனிக் கிளைகளை அகற்றி விட்டு ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது ஒரு கிராம் கார்பண்டசிம் மருந்துகளில் ஒன்றை 30 நாட்கள் இடைவெளியில் தெளிந்து கட்டுப்படுத்தலாம்.

பயிர் பாதுகாப்பு முறை:

 • எதிர்ப்புத் திறன் கொண்ட எலுமிச்சைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
 • எலுமிச்சையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து, எலுமிச்சை சாகுபடியாளர்கள் உயர் மகசூல் பெற்று உன்னதமான லாபமும் ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “எலுமிச்சை சாகுபடியில் உயர் மகசூல்

  • gttaagri says:

   Dear Sir,
   As per TNAU, Citrus canker/sori noi in tamil is controlled as follows:
   ஸ்டெரப்டோமைசின் மருந்தை 100 பி.பி.எம் அடர்த்தியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.3 சதக்கரைசலுடன் கலந்து தெளிக்கவும்.
   I am not aware of any organic method.
   Hope this helps
   -admin
   Reference: http://agritech.tnau.ac.in/ta/horticulture/horticulture_fruits_acidlime_ta.html

   • deva says:

    Hi
    At times some black worms appear then turns to green and grows maximum about 3cms, . It eats every thing and only stocks are visible within afew days, I t appears on kerry leaves plant also .Un able to control . These worms appear the day you see fresh new leaves. pl advice,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *